தனியாக கோல் அடித்துக்கொண்டிருந்த கங்கனாவுக்கு எதிராக களம் இறங்கும் பிரபல நடிகை..

by Chandru, Sep 9, 2020, 16:41 PM IST

கடந்த சில மாதமாகவே ஆடுகளத்தில் தனி ஆளாக இறங்கி கோல் அடித்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். பாலிவுட்டின் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், ஹீரோக்கள், சிவசேனா கட்சியினர், மும்பை போலீஸ் என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டியும், புகார் கூறியும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் என்றும் அதிர வைக்கிறார்.


வேறு யாராவது இப்படி கூறியிருந்தால் பாஜகவினர் தேச துரோகி பட்டம் கட்டி யிருப்பார்கள் என்று கூறும் இணைய தள வாசிகள் கங்கனா பாஜகவின் அனுதாபி மட்டுமல்ல மோடியின் ஆதரவாளர் என்பதால் அமைதி காக்கிக்கிறார்கள். அத்துடன் அவருக்கு மத்திய பாஜ அரசு ஒய் பிளஸ் கமாண்ட்டோ பாதுகாப் பும் அளித்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சி யாக இருக்கும் சிவசேனா, நடிகை கங்கனா வுக்கு பதிலடி கொடுத்து வந்தாலும் நடிகை பேச்சு என்றதும் வலைதளங் களிலும். மீடியாக்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது அரசியல் கட்சியி னர் மெதுவாக காய் நகர்த்தத் தொடங்கி உள்ளனர். கங்கனாவுக்கு பதிலடி தருவதற் காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை நக்மா களம் இறங்கி இருக்கிறார். அவர் எடுத்த எடுப்பிலேயே கங்கனாவை போட்டு தாக்கி இருக்கிறார்.


மகாராஷ்டிர மாநிலம் , முக்கிய நகரமான மும்பை பெயரை நடிகை கங்கணா ரணாவத் கெடுத்துக்கொண்டிருக்கிறார். போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த பாலிவுட் டுக்கும் அவப் பெயரைக் கொண்டு வருகிறார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித்தார், பின் பாலிவுட்டுக் குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்ப வர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார். இதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கங்கனாவை முதல் ரவுண்டிலேயே ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் நக்மா.


மேலும், தங்கள் கட்சிக்கு ஏற்றாற்போல பேசுவதால் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பைக் கொடுத்துள் ளார்கள். ஆனால், கங்கனா மும்பைக்கு எதிராகப் பேசுகிறார். பாலிவுட்டில் நடித்து பத்ம விருது பெற்றவர். உலக அளவில் புகழ்பெற்ற மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு என்கிறார் போதை மருந்து பயன்படுத்துவதாக பொத்தாம் பொதுவாக பாலிவுட்டையும் உலக அளவில் இழிவுபடுத்துகிறார். அவர் சொல்வதற்கெல்லாம் ஆதாரம் தர வேண்டும். இல்லாவிட்டால் மும்பை மக்கள் அவரைடம் திரண்டு நின்று கேள்வி கேட்பார்கள் என கங்கனா ரானாவத்தை விளாசியிருக்கிறார் நடிகை நக்மா.


இரண்டு நடிகைகளின் மோதலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடிகை நக்மா தமிழில் மேட்டுக்குடி, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More Cinema News