தொழில் அதிபர் ஆன மற்றொரு பிரபல நடிகை..

by Chandru, Sep 10, 2020, 13:13 PM IST

பிரபல நடிகைகளில் சிலர் நடிப்போடு நின்றுவிடாமல் தங்களின் சம்பாத்தியத் தை கொண்டு தொழில் தொடங்கி தொழில் அதிபர்கள் ஆகவும் மாறி வருகின்றனர். நடிகர் ரகுல் பிரீத் சிங் உடற் யிற்சி கூடங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல் சகுனி படத்தில் நடித்த பிரணிதா சுபாஷ் பெங்களூரில் பூட்லெகர் என்ற ரெஸ்டாரண்ட் தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது நடிகை சமந்தா தொழில் அதிபர் ஆகி இருக்கிறார்.


இதுபற்றி சமந்தா கூறியது:
ஸ்டைலான காஸ்டியூம் அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய பேஷன் உடைகளை குறிப்பிட்டு பாராட்டு வார்கள். ஸ்டைல் நடிகை என்றால் என் பெயரை சொல்வதைல் எனக்கு மகிழ்ச்சி. பேஷன் டிசைன் மீது எனக்கு அதிக ஆர்வம். நடிகை ஆன பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன். எனது தோழி பேஷன் டிசைனிங் கற்றவர்.


பேஷன் என்ற விஷயத்தை சினிமாவோடு நிறுத்தி விடாமல் நானே பேஷன் டிசைனிங் கற்று பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி அதற்காக பிரத்யேகமாக பேஷன் டிசைன் நிறுவனம் தொடங்கி உள்ளேன். இது எனது கனவு என்று கூட சொல்லாம். இதற்காக எனக்கு மாதக்கணக்கில் நேரம் தேவைப்பட்டது. இப்போதுதான் அது நிறைவேறி உள்ளது. நான் தொடங்கி இருக்கும் இத் தொழில் முயற்சியை எல்லோருடனும் சந்தோஷ மாக பகிர்ந்து கொள்கிறேன்.


இவ்வாறு சமந்தா கூறி உள்ளார்.
சமந்தா தற்போது படப்பிடிப்பிற்காகவும் காத்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அடுத்து நடிக்கிறார் சமந்தா. இதில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை