போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ரகசிய திருமணம்? மணக்கோலத்தில் படம் வெளியானதால் பரபரப்பு..

by Chandru, Sep 11, 2020, 11:06 AM IST

போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தினமும் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மருந்து பயன்படுத்தும் நடிகர். நடிகைகள் 15 பேர் பட்டியலைக் கன்னட இயக்குனர் இந்திரஜித் போதை மருந்து தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரத்தில் அரசு ஊழியர் ரவிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகினி திவேதியுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கும் போதை மருந்து விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது அதை சஞ்சனா மறுத்தார். ஆனால் போதை மருந்து தடுப்பு பிரிவினர் காஞ்சனாவைக் கைது செய்தனர். கைதான ராகினி திவேதி, சஞ்சனா இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சஞ்சனா கல்ராணிக்கு டாக்டர் ஒருவருடன் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சஞ்சனா இதுவரை தன்னை சிங்கிள் அதாவது திருமணம் ஆகாதவர் போலவே காட்டி வந்தார். ஆனால் அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி திரையுலகினரையும் ரசிகர்களையும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது.

சமீபத்தில் பெங்களூரில் உள்ள சஞ்சனா வீட்டில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் செல்வதற்கு முன் சஞ்சனா வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியில் சென்றார். அவர் யார் என்று விசாரித்தபோதுதான் சஞ்சனா திருமண விவகாரம் அம்பலமாகி இருக்கிறது. இருவரும் கடந்த சில வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தாக கூறப்படுகிறது. சஞ்சானா தற்போது போஸிஸ் விசாரணையில் உள்ளார். அவர் திருமண விவகாரம் பற்றி முறையாகப் பதில் அளிக்க முடியாமலிருக்கிறார். ஆனால் அவரது தாயார் ரேஷ்மா கல்ராணி, கடந்த 3 வருடங்களுக்கு முன் சஞ்சனாவுக்கும் டாக்டர் அஜீஸிக்கும் திருமண நிச்சயார்த்தம் நடந்தது. சென்ற ஏப்ரல் மாதம் திருமணம் செய்யவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது என்றார். சஞ்சனா தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் மலையாளத்தில் சில நேரங்களில் சிலர் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை