கமல்ஹாசன் மகளுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி.. அந்த பிரபலம் யார் தெரியுமா?

by Chandru, Sep 11, 2020, 11:16 AM IST

நடிகர் கமல்ஹாசன் 2வது மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் முதலில் இயக்குனராகும் எண்ணத்துடன் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினர். பின்னர் தனுஷ் நடித்த இந்தி படம் ஷமிதாப் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் அஜீத் நடித்த விவேகம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்ததுடன் தற்போது அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்தார்.

தற்போது ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தைத் தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். இப்பட்ட்தில் மற்றொரு ஹைலைட் பிரபல பாப் இசை பாடகி உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கிறார்.உஷா உதூப் தமிழில் 1975 ஆண்டிலேயே பணியாற்றி இருக்கிறார். கமல்ஹாசன் நடித்த மேல் நாட்டு மருமகள் படத்தில் லைஃப் ஈஸ் பியூட்டி ஃபுல் என்ற பாடல் பாடி இருக்கிறார். மேலும் அஞ்சலி படத்தில் வேகம் வேகம்.. என்ற பாடல் பாடினார்.

பின்னர் சில வருடங்களுக்கும் முன் கமல்ஹாசன் திரிஷா நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்திலும் நடித்திருக்கிறார் உஷா என்பது குறிப்பிடத்தக்கது.உஷா உதூப் ஆங்கில பாப் இசை பாடகியாக இருந்தாலும் தமிழ்க் கலாச்சாரப் படித்தான் எப்போதும் சேலை அணிந்து நெற்றி நிறையக் குங்குமப் பொட்டு வைத்திருப்பார். மும்பையில் பிறந்திருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றிப் பாடல்கள் பாடி இருப்பதுடன் உலக அளவில் தனக்கென ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News