5 மொழி படத்தில் ரஜினி ஜோடி நடிகை கெத்தாக ரீ என்ட்ரி.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல இயக்குனர்..

by Chandru, Sep 11, 2020, 11:29 AM IST

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். அறிமுகமான போது இருந்த அழகுடன் இன்றும் தன் உடற்கட்டைப் பராமரித்து வருகிறார். சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கிவிட்டார். இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

நடிகை ஸ்ரேயா தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் "கமனம்" படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார்.இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ். இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கஸ்தூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். கதை-திரைக்கதை-இயக்குகிறார் சுஜனா ராவ். ரமேஷ் கஸ்தூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் வி.எஸ் தயாரிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசை. ஞான சேகர் வி.எஸ். ஒளிப்பதிவு. சாய் மாதவ் புர்ரா வசனம். ராமகிருஷ்ணா அராம் படத்தொகுப்பு. சதிஷ் (AIM)மக்கள் தொடர்பு.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை