போதை மருந்து வழக்கில் தமிழ் பிரபல நடிகையை சிக்க வைத்த ரியா.. கண்காணிப்பு வளையத்தில் சிக்கிய கமல், சூர்யா, சிவகார்த்தி பட ஹீரோயின்..

by Chandru, Sep 12, 2020, 11:12 AM IST

செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்த என் ஜி கே படத்திலும். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். விரைவில் ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க உள்ளார். அழகான நடிகையான இவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார், அவரைப்பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரகுல் ப்ரீத் போதைப்பொருள் உட்கொண்டதாகப் போதைப் பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து போதை மருந்து தடுப்பு அதிகாரிகளின் (என்சிபி) பார்வை ரகுல் ப்ரீத் மீது விழுந்திருக்கிறது. இப்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தினர் அவரை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். நடிகைகள் சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயர்களைத் தனது 20 பக்க வாக்கு மூலத்தில் ரியா குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர்கள், இயக்குநர்கள், நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பலர் அடங்கிய சுமார் 25 ஏ-லிஸ்டர் பாலிவுட் பிரபலங்கள் பெயர்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ரியா குறிப்பிட்ட நடிகை சாரா அலிகான் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள். இவர் ஆனந்த் எல் ராய் இயக்கும் தனுஷின் பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ரகுல் பிரீத் பொருத்தவரை ரவிக்குமார் இயக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படம், இரண்டு பாலிவுட் படங்கள், ஒரு தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.போதை மருந்து வழக்கில் ஏற்கனவே நடிகைகள் சஞ்னா சிங், ராகினி திவேதி கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


More Cinema News