நகைச்சுவை நடிகர் வடிவேலு சாலில் இருந்தவர் டிவி நடிகர் வடிவேல் பாலாஜி. விஜய் டிவியில் அது இது எது மற்றும் கலக்கப்போவது யார் போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். சுட்டபழம் உள்ளிட்ட ஒரு சில படங்களும் நடித்திருக்கிறார். மேலும் சினிமா நடிகர் வடிவேலு படங்களில் அணியும் மேக்கப் போன்றே அணிந்து அவரைப் போலவே நடித்து காமெடி செய்வார். வடிவேல் பாலாஜி.டிவி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி 2 தினங்களுக்கு மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டுக் கடந்த 15 நாட்களாக கஷ்டப்பட்ட அவரது உயிரைக் காப்பாற்ற மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துக்கொண்டு அலைந்து திரிந்து லட்சம் லட்சமாகச் செலவு செய்து சிகிச்சை பார்த்தும் பலனில்லாமல் இறந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய் சேதுபதி. அவரது குடும்பத்திற்கு நிதி உதவி அளித்தார். அதுபோல் நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, வடிவேல் பாலாஜி மறைவையொட்டி உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் என் சாயலில் இருக்கும் ஒரு நல்ல மனிதன் இறந்த பிறகு, எப்படி என் பிறந்த நாளை நாம் கொண்டாட முடியும். இந்த வருடம் எனது பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் கிடையாது. உன்னதமான நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என தெரிவித்திருக்கிறார். இன்று நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.