சிம்பு, தனுஷ் நடிகை மூச்சு விட முடியாமல் திணறல்.. என்ன நடந்தது தெரியுமா?

by Chandru, Sep 12, 2020, 16:07 PM IST

நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடித்த படம் 'ஓஸ்தி. இதில் ஹீரோயினாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். அதேபோல் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திலும் கதாநாயகியாக ரிச்சா நடித்திருந்தார். இன்னும் ஒன்றிரண்டு படங்களில் நடித்த ரிச்சா பின்னர் காதல் பிரச்சனைகளில் சிக்கியதால் படங்களில் கவனம் செலுத்தாமலிருந்தார். இந்நிலையில் தனது நீண்டகால காதலன் ஜோலாங்கெல்லாவை திடீர் திருமணம் செய்து கொண்டு இந்தியாவிலிருந்தே ஜூட் விட்டார். அமெரிக்காவில் போர்ட் லேண்ட் நகரில் காதல் கணவருடன் குடியேறினார்.

காதல் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுப் பறந்த ரிச்சா கங்கோபாத்யாய் தற்போது ரிச்சா லங்கெல்லா ஆகி இருக்கிறார். இவர் தனது இணைய தள பக்கத்தில் முகத்தில் மூடியுடன் ஒரு படம் பகிர்ந்திருக்கிறார். கொரோனா தொற்று அதிக மாக அமெரிக்காவில் இருப்பதால் முகமூடி அணிந்திருக்கிறாரோ என்று பார்த்தால் இது அதைவிடப் பயங்கரமான மாசு பிரச்சனையாக இருக்கிறது.ரிச்சா தங்கி உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு அதிலிருந்து வரும் கரும்புகை காற்றோடு கலந்து காற்றிலிருக்கும் ஆக்ஸிஜனையையே மாசுபடுத்தி விட்டது. இதனால் ரிச்சா மற்றும் அப்பகுதியில் வாழ்பவர்கள் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து அந்நகர மேயர் போர்ட் லேண்ட் அவசரக்கால நிலையை அறிவித்திருக்கிறார்.

ரிச்சா லாங்கேலா தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் வீட்டில் இருக்கிறேன், ஆனால் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறவில்லை. காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. புகை காரணமாக சுவாசிப்பது மிகவும் கடினமாக உள்ளது. நான் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்திருக்கிறேன் அது கருமை படிந்துவிட்ட்டது இப்போது வேறு வகையான முகமூடியை நான் அணிய வேண்டும்.எங்கள் பகுதியில் காற்று சுத்திகரிப்பான்கள் எல்லா இடங்களிலும் விற்கப்படுகின்றன. நாங்கள் எங்கள் வீட்டில் இருமலில் இருக்கிறோம், புகையால் தலைவலியும் ஏற்பட்டு அதற்கு எதிராகப் போராடுகிறோம். ஜோவும் நானும் எங்களின் ஒரு ஆண்டு திருமண நிறைவை கொண்டாடப் போட்டு வைத்திருந்த திட்டமெல்லம் பாழாகிவிட்டது.இவ்வாறு ரிச்சா கூறினார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை