பிரபல இசை அமைப்பாளருக்கு செல்லாமா செல்லாமா பாடகியுடன் காதல்?

by Chandru, Sep 13, 2020, 17:53 PM IST

இளம் இசை அமைப்பாளர் அனிருத் குறுகிய காலத்தில் ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு இசை அமைத்தார், கமல்ஹாசனின் இந்தியன்2விற்கு இசை அமைக்கிறார். விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தவிர நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டாக்டர், சியான் 60 போன்ற படங்களுக்கு இசை அமைக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சமீபத்தில் கூட ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சேர்ந்து பாடிய செல்லம்மா. செல்லாம்மா பாடல் வைரல் ஆனது.
ஜோனிடாவை ஓ காதல் கண்மணி; படத்தில் மெண்டல் மனதில் பாடல் ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார். டெல்லியில் பிறந்து ஜோனிடா கனடாவில் வளர்ந்தவர். ஒரேமுறை பிரபல நடிகை ஒருவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அனுரூத் அதன் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காமலிருந்து வருகிறார். தற்போது ஜோனிடாவுடன் காதல் கிசிசிவில் சிக்கி இருக்கிறார்.


முன்னதாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இதில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலககெங்கும் பிரபலமானது. அடுத்த ஒரு வருடம் தனுஷ், அனிரூத் எங்கு சென்றாலும் அந்த பாடலை பாடச் சொல்லி ரசிகர்கள் அவர்களை தொல்லை செய்தனர். அவர்களும் சளைக்காமல் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


More Cinema News