என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...மாஸ்க் போடுங்கம்மா

by Nishanth, Sep 13, 2020, 17:31 PM IST

மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஒரு இளம்பெண்ணுக்கு அங்கிருந்த ஒரு அன்னப்பறவை மாஸ்க் போட்டுவிடும் வீடியோ இப்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் மாஸ்க் அணியவேண்டும், சானிட்டைசர் பயன்படுத்த வேண்டும் என்று அரசு எவ்வளவு எடுத்துக் கூறினாலும் யாரும் அதை சட்டை செய்வதாக இல்லை. நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் பெரும்பாலானோர் மாஸ்க் எதுவும் அணியாமல் தான் பொது இடங்களில் வலம் வருகின்றனர்.
இந்நிலையில் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஒரு இளம்பெண்ணுக்கு ஒரு அன்னப்பறவை மாஸ்க் மாட்டிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. மிருகக்காட்சி சாலைக்கு சென்ற அந்த இளம்பெண் மாஸ்கை முகத்தில் போடாமல் கழுத்தில் தொங்கவிட்டிருந்தார். அங்கிருந்த அன்னப்பறவையை பார்த்த அந்த பெண் அதன் மிக அருகே சென்றார். அப்போது அந்த அன்னப்பறவை தன்னுடையை அலகால் அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடைந்த மாஸ்கை இழுத்து விட்டது. உடனே அந்த மாஸ்க் அந்தப் பெண்ணின் முகத்தில் கச்சிதமாக பொருந்தி நின்றது.


ஒரு கணம் அந்தப் பெண் திகைத்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டார். பெண்ணுக்கு அன்னப்பறவை மாஸ்க் மாட்டிவிடும் இந்த வீடியோ ட்விட்டரில் வெளியானது. இந்த வீடியோவுக்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அந்த அன்னப்பறவைக்கு இருக்கும் பொறுப்புணர்வை பார்த்தாவது மாஸ்க் போடாதவர்கள் திருந்த வேண்டும்.