சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் இயக்குனர் பாரதிராஜா ஆதரவு...!

by Chandru, Sep 14, 2020, 19:29 PM IST

நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்க எடுக்க வேண்டும் என்று நீதிபது சுப்ரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் சூர்யாவின் பேச்சு இயக்குனர்கள் சீனுராமசாமி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.


இந்நிலையில் சென்னையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பா ளர்கள் சங்கத்தை சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா தொடங்கினார். இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகரா ஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டனர். புதிய சங்க அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.


பின்னர் சங்க தலைவர் பாரதிராஜா கூறியதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இந்த புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வலுவான வர்கள் எல்லோரும் இணைந்துள் ளோம். தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸ் செய்வது பற்றி எழுதிய கடிதத் துக்கு திரை அரங்க உரிமையாளர்கள் அவர்களது நிலைப்பாட்டை தெரிவித் துள்ளனர். எங்கள் துணைத்தலைவர் எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதற்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. பதில் வந்த பிறகு சங்கத்தில் ஆலோசித்து எங்கள் முடி வை அறிவிப்போம். நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து குறித்து கேட்கிறார்கள் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார். அவரு டைய கருத்துக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

இதையும் பாருங்க: விஜயின் அடுத்தப் படம், தனுஷ் - செல்வராகவன் காம்போ, சூர்யா படம் ஓடிடியில் மட்டும்தான் ரிலீஸ் ஆகுமா?

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை