நடிகை ஆன்டிரியா சூர்யா ஜோடியாக வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். தற்போது நோ என்ட்ரி; படத்தில் நடிக்கிறார். உலகிலேயே அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி காடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியான கா என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்தது. இதுவொரு ஒரு த்ரில்லர் படம் . நர வேட்டையாடும் மூர்க்கமான நாய்களின் பிடியில் சிக்கிக்கொள்ளும் ஆன்ட்ரியா அவற்றிடமிருந்து எப்படி தப்புகிறார் என்பதை த்ரில்லுடன் படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக்.
இதுபற்றி இயக்குனர் அழகு கார்த்திக் கூறுகையில், “கடந்த அக்டோபரில் இந்த படத்தை சிரபுஞ்சியில் 45 நாட்கள் படமாக் கினோம். மேகாலயாவில் உள்ள இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச மழையைப் பதிவு செய்கிறது. நாங்கள் சென்னையைச் சேர்ந்த சமையல்காரர்கள் உட்பட 110 பேர் கொண்ட குழுவாக இருந்தோம். அங்கு சென்று தங்கி இருந்து படப் பிடிப்பு நடத்தினோம். இதில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.
ஆண்ட்ரியா சிரபுஞ்சிக்கு சென்னையில் இருந்து ஒரு ஜீப்பில் ஒரு சாலைப் வழியாக தனியாக பயணம் மேற்கொண்டு வந்தார். உடன் ஒரு சைக்கிளும் ஜீப்பில் கொண்டு வந்தார்.
அறிமுக பாடலில் சில மாண்டேஜ் காட்சிகளை ஆன்ட்ரியாவிடம் காட்டினோம் அது அவருக்கு பிடித்திருந்தது. நோ என்ட்ரி படத்தில் அவரது வேடம் என்ன என்பதை முழுவதுமாக தற்போது கூற முடியாது. ஆனாலும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் வில்வித்தை கற்றுக்கொண்டார் . நான்கு நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயிற்சி அளித்தோம், வில்லுவை எவ்வாறு பிடிப்பது, அம்புவை மிக விரைவாக எப்படி ஆங்கிள் (கோணபம்) பார்த்து எய்வது என்ற நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார்.
மேலும் இப்படத்தில் முக்கிய அம்சமாக நர வேட்டை நாய்கள் நடிக்கின்றன. ஜெர்மன் ஷெப்பர்ட், அகிதா மற்றும் டோபர்மேன் என 15 நாய்களுக்கு பயிற்சி அளித்தோம். நாய்களுடன் படப்ப்டிப்பு நடத்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றோம்.
அவை தோன்றும் காட்சிகள் மற்றும் அவை என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை அவர்களுக்கு வழங்கினோம். படப்பிடிப்பு செயல்முறையை கூட பதிவு செய்துள்ளோம். ”
எப்போதும் மழை சில மணி நேரம் மழை இருக்காது என்ற நிலையில் அதற்காக அட்டவணை தயார் செய்தோம். எப்போது வராது என்பதைப் பொறுத்து படப்ப்டிப்பு திட்டமிடப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதை ஷூட்டிங்கிறகான நேரமாக ஃபிக்ஸ் செய்துக்கொண்டோம். ஒரு காட்சிக்கு, நாங்கள் ஒரு இரட்டை டெக்கர் இயற்கை பாலத்தை கடக்க வேண்டியிருந்தது; மலைகளில் சிறிய படிக்கட்டு போன்ற செதுக்கல்கள் இருந்தன, அது சில இடங்களில் கற்களால் நிரப்பப்பட்ட வெற்று நிலம். இதை நடந்துதனகக்டக முடியும். எனவே, நாங்கள் எங்கள் எல்லா உபகரணங்களையும் பேக் செய்துக் கொண்டு நான்கு மணி நேரம் ஏறினோம், ஆனால் இருட்டாகிவிடுவதால் இரண்டு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்தது. நாங்கள் சாலையை அடைய ஏழு மணி நேரம் ஏற வேண்டியிருந்தது. மறுநாள் எங்கள் கால்கள் வீங்கிவிடும் இவ்வாறு இயக்குனர் கூறினார்,