தல நடிக்கும் வலிமை ஷூட்டிங் முடிவது எப்போது? இன்னும் 60 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது..

by Chandru, Sep 15, 2020, 10:25 AM IST

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியும் தொற்று பயத்தால் தள்ளிப்போகிறது..

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களை அடுத்து தல் அஜீத் நடிக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார்.
படம் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்துக்கும் மேலான தாமதத்துக்கு பிறகே இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா தாக்குதல் காரணமாக அதிரடி த்ரில்லர் வலிமை படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், 'வலிமை' படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் தொடங்க உள்ளது. கொரோனா தொற்று இன்னும் ​ முழுமையாக குறைத்ததால் படப்பிடிப்பை தாமதப்படுத்தி வருகிறார்கள்.
வரும் தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட எண்ணியிருந்த நிலையில் அது முடியாமல் போனது. எனவே வரும் பிப்ரவரி 2021 க்குள் வலிமை படப்பிடிப்பை முடிக்க திடமிடப்பட்டிருக்கிறது. இதனால் இப்படம் அநேகமாக தமிழ் புத்தாண்டு வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


'வலிமை ' படப்பிடிப்பை முற்றிலுமாக முடிக்க இயக்குனர் எச். வினோத்துக்கு இன்னமும் 50 அல்லது 60 நாட்கள் தேவைப்படுகிறது. அஜித்தின் பகுதியை படமாக்க மட்டுமே கிட்டத்தட்ட 30 நாட்கள் தேவைப்படுகிறது. 2021 ஜனவரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. இப்படத்தை முடித்த பின்னர் தல அஜீத் தனது 61 வது படத்தை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்க எண்ணி உள்ளார்.


More Cinema News

அதிகம் படித்தவை