எம்ஜிஆர் -ஜெயலலிதா நடித்த ஜெய்பூர் அரண்மனையில் பிரபல நடிகர் - நடிகை ஹூட்டிங்..

Advertisement

ஜெய்ப்பூரில் அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் படமாக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி, டாப்ஸி பங்கேற்றனர். பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்பூரில் உள்ள சிட்டி பேலஸ், ரம்பாக் பேலஸ் மற்றும் சமோட் பேலஸ் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுவொரு நகைச்சுவை கலந்த காதல் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 நாட்களாக ஜெய்ப்பூரில் நடிகர்கள் மற்றும் குழுவினர் சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படப்பிடிப்பிற்கு ராஜஸ்தான் அரசாங்கம் மிகவும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. அதிக சிரமமின்றி அனுமதி பெறப்பட்டதாக பட தரப்பு தெரிவிக்கிறது. முன்னதாக நடிகர்கள் உட்பட குழுவினர் கோவிட் -19 சோதனை செய்துக் கொண்டனர். சென்னையிலிருந்து ஜெய்ப்பூருக்கு விமானத்தை பிடிப்பதற்கு முன்பு வீட்டிலேயே அவரவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தி இருந்தனர்.


படப்பிடிப்புக்காக அரண்மனையில் உள்ள அனைத்து அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். நடிகர்கள் முதல் கடைசி குழு உறுப்பினர்கள் வரை அரண்மை வளாகத்திற்குள் தங்கியுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் வெளிப்புற வாயில் மூடப்பட்டது.
அரண்மனை ஊழியர்களால் சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒரு சில நடிகர்களைத் தவிர, எந்தவொரு குழு உறுப்பினரும் 40 வயதுக்கு மேல் இல்லை. அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட அனைத்து கட்டுபாடுகளும் அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
சமீபத்தில், படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ராதிகா சரத்குமார், படப்பிடிப்பு இடத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு செல்ஃபி பகிர்ந்துள்ளார். அரச உடையை விஜய்சேதுபதி அணிந்திருந்தார். இது ஒரு மன்னர் காலகட்டப்படம், டாப்ஸி நாகரீக ஸ்மார்ட் பெண்ணாக நடிக்கிறார்.


சுமார் 40 நாட்கள் படக்குழு அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்துகிறது. நடிகர்கள் யோகி பாபு, ராஜேந்திர பிரசாத், ஜெகபதி பாபு, சுரேஷ் மேனன், தேவதர்ஷினி, சேத்தன், சுப்பு பஞ்சு, ஜார்ஜ், சுரேகா வாணி, ரமேஷ் திலக், ராஜ், மாதுமிதா, லிங்கா மற்றும் சுனில் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.
இந்த அரண்மனையில் கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ்படம் கே.சங்கர் இயக்கித்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண் என்று அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அடிமைப் பெண் படத்தில் எம்ஜிஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரம் நிலவே வா பாடல் இங்கு படமக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>