கொரோனாவால் பாதித்த தக தைய தைய பாடல் புகழ் நடிகை பரிதவிப்பு.. மகனை கட்டிப்பிடிக்க முடியவில்லையே..

by Chandru, Sep 15, 2020, 10:42 AM IST

சீனாவில் பரவிய கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. 5 மாதங்கள் கடந்தும் இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை. ஏழைகள் என்றில்லாமல் ரொம்பவும் ஹைஜீனிக்காக (சுத்தமாக) இருக்கிறன் என்று பார்த்து ஒவ்வொன்றைய்ம் செய்யும் விஐபிக்கள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.


சில மாதங்களுக்கு முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.
கோலிவுட்டில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, சுமலதா, நவ்நீத் கவுர் போன்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அனைவருமே குடும்பத்தை பிரிந்து தனிமைப்படுத்தலில் இருந்தனர். மகளை விட்டு பிரியாமல் அவரது கையை பிடித்துக்கொண்டே எங்கு சென்றாலும் நடக்கும் ஐஸ்வர்யாராய் 7 வயது மகள் ஆரத்யாவை பிரிந்து தனிமைப்படுத்தலின் போது பிரிந்து தாய்மையின் தவிப்பில் ஆழ்ந்தார். இருவருக்கும் தொற்று குணம் ஆன பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைகளையும், விரல்களையும் இணைத்து ரசிகர்களுக்கு நன்றியும், வணக்கமும் தெரிவித்தனர்.

அதே நிலைமை தற்போது மற்றொரு நடிகைக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யாராய் போலவே இந்த நடிகையும் மணிரத்னம் படத்தில் நடித்தவர். உயிரே படத்தில் இடம்பெற்ற, தைய தைய தையா பாடலுக்கு நடனம் ஆடியவர் மலைக்கா அரோரா. இவர் கொரோனா வைரஸ் பாதித்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரது மகன் அர்ஹான் மற்றும் செல்ல நாய்க்குட்டி காம்பவுண்டுக்கு மறுபக்கம் உள்ள வீட்டில் தங்கி இருக்கின்றனர். தொற்று பயத்தால் மகளை நெருங்க முடியாமலிருக்கும் மலைக்கா மகனை கட்டிபிடிக்க முடியாமல் தவிப்பதாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.


கொரோனா பாதித்துள்ளதால் மகனை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லையே என்று வருத்தமாகக் கூறியுள்ள நடிகை மலைகா அரோரா இன்ஸ்டாகிராமில் தன் மகன் அர்ஹான் மற்றும் செல்ல நாய்க் குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சுவற்றுக்கு மறுபக்கம் நின்று அவர்கள் எட்டிப் பார்க்கின்றனர். இது உருக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.


More Cinema News

அதிகம் படித்தவை