3 சர்வதேச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் ஒத்த செருப்பு !

by Loganathan, Sep 16, 2020, 10:54 AM IST

பார்த்திபன் ஒரு பன்முக கலைஞர் என்பதைத் தமிழ் சினிமா உலகம் அறிந்த ஒன்றே . அவரின் வசனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு . புதுமை முயற்சிகளை சினிமாவில் புகுத்த முயற்சிப்பவர்களில் இவரும் முக்கியமான நபர் . இவரின் "கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம் " போன்ற பல முயற்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன . அந்த வரிசையில் உலக சினிமாவையும் சிலாகிக்க முயற்சித்து வரும் பார்த்திபன் அவர்களுக்கு அதனை நிறைவேற்றிய பெருமை அவரின் " ஒத்த செருப்பு " மூலம் நிறைவேறியுள்ளது.

பார்த்திபன் இயக்கி நடித்த படம் " ஒத்த செருப்பு சைஸ் 7 " படம் பார்த்த அடிமட்ட ரசிகன் முதல் ஆஸ்கர் விருது வழங்கும் குழுவின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.இந்த படம் 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. ஜீரி விருதான சிறந்த இயக்குனர் , சிறந்த படம் , சிறந்த தனிநபர் நடிப்பு என்ற மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

இதனைப் பற்றி பார்த்திபன் கூறியது:

மனதைத் தாலாட்டும் மற்றுமொரு பாராட்டு "ஒத்த செருப்பு சைஸ் 7" படத்திற்கு ட்ரோன்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது பெருமையாக உள்ளது . மேலும் இவ்வருடம் எனது அடுத்த பெரிய முயற்சியால் "இரவின் நிழல் " படத்தைத் தொடங்கியுள்ளேன். இதற்கான பாராட்டுகளை அடுத்த வருடம் பெறுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்றார்.


More Cinema News