பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் போதை மருந்து பறிமுதல் பரபரப்பு தகவல்.. இறந்த நடிகர் வழக்கில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சைகள்..

by Chandru, Sep 16, 2020, 14:15 PM IST

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தது முதல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதலில் இந்த வாழ்க்கை மும்பை பாந்தரா நகர போலீஸ் பதிவு செய்து விசாரித்தது. இந்நிலையில் தான் சுஷாந்த் தற்கொலைக்கு நடிகை ரியா சக்ர போர்த்தித் தான் காரணம், அவர் போதை மருந்து கொடுத்து தற்கொலைக்குத் தூண்டினார், ரூ 15 கோடி சுஷாந்த் வங்கிப் பணம் மாயமாகியது என பாட்னா போலீசில் சுஷாந்த் தந்தை கேகே சிங் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கு சூடு பிடித்தது. சுப்ரீம் கோர்டுக்கு சென்ற ரியா தன் மீது தவறாகப் புகார் செய்துள்ளனர். நான் அப்பாவி. பாட்னா வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்றார். ஆனால் கடைசியில் வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கூடுதலாகப் போதை தடுப்பு பிரிவு, அமலாக்கத் துறை என மேலும் 2 அமைப்புகள் ரியாவிடம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் ரியா அதிரடியாக போதை மருந்து தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

ரியாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகின்றன. நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட 25 பேர்களின் பெயர்களை போதை மருந்து பயன்படுத்தியதாக ரியா கூறி உள்ளாராம். அவர்களை தற்போது போதை மருந்து தடுப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். ரியா கொடுத்த தகவலின் படி சுஷாந்தின் பாவானா ஏரி பண்ணை வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியபோது ஹூக்காக்கள், ஆஷ் டிரேக்கள் மற்றும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

காதலி ரியா,அவரது சகோதரர் ஷோவிக், வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா, பிளாட்மேட் சித்தார்த் பிதானி மற்றும் பிற நண்பர்களுடன் சேர்ந்து தனது பண்ணை வீட்டில் சுஷாந்த் பார்ட்டி நடத்து உள்ளார் என்ற புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சுஷாந்த் தற்கொலை, காதலி ரியா கைது விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


More Cinema News