நடிகை தற்கொலையில் 2 காதலர்கள் கைது, 3வது காதலர் தப்பி ஓட்டம்.. நடிகையின் பரிதாப மரணம்..

by Chandru, Sep 16, 2020, 15:52 PM IST

கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் மக்களை வாட்டிக்கொண்டிருந்த நிலையில் பல ஹீரோயின்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தங்களின் கவர்ச்சி படங்கள், ஒர்க் அவுட் படங்கள் என வெளியிட்டு உற்சாகப்படுத்தி வந்தனர். வருமானம் இல்லாமல் வறுமையால் சில துணை நடிகர், நடிகைகள் தற்கொலைகளும் நடந்தன. இந்த நிலையில் காதலியே போதை மருந்து கொடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்குத் தூண்டியதாக ரியா சக்ர போர்த்தி கைது செய்யப்பட்டார். இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் டிவி நட்சத்திரங்களுக்கு மத்தியிலும் பல்வேறு மாற்றங்கள், மோதல்கள், காதல், கல்யாணம் என கொரோனா லாக்டவுனில் நடந்தது. சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகை ஸ்ராவனி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது கதை மிகவும் பரிதாபமானது. 2015 ஆம் ஆண்டு சாய்ரெட்டி என்பவரைக் காதலித்தார் ஸ்ராவனி. அவருக்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்தாராம். அவரை திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர் கூறி இருந்தார்கள். ஆனால் சாய் ரெட்டியுடனான காதல் முறிந்தது.

பிறகு டிக் டாக் பிரபலம் தேவராஜ் ரெட்டியுடன் ஸ்ராவனிக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டார்களாம். ஸ்ராவனியை ஆபாசமாக வீடியோ எடுத்தார், அந்த வீடியோவை காட்டி ஸ்ராவனியிடம் அவர் பணம் பறிக்கத் தொடங்கினார். இதில் அவர் மன உளைச்சலுக்குள்ளானார்.இதில் மனம் வெறுத்திருந்த ஸ்ராவனி தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவரைச் சந்தித்தார். அவர் உன்னைப் பெரிய ஹீரோயினாக்குகிறேன் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றிவிட்டாராம். நம்பிய 3 காதலர்களும் ஏமாற்றியதால் ஸ்ராவனி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாய்ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அசோக்குமார் தப்பி ஓடி தலைமறைவாக இருக்கிறாராம்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை