அஜீத்குமார் பெயரை சொல்லி மோசடி நடக்கிறது.. தல வழக்கறிஞர் எச்சரிக்கை..

Actor Ajiith Caustion Statement To Indysry People and Public

by Chandru, Sep 17, 2020, 17:56 PM IST

சினிமாவில் எனக்கு ரஜினியை தெரியும் என்று தொடங்கி அஜீத், விஜய் என யோகிபாபு வரை பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். உஷாரானவர்கள் விசாரித்து ஏமாற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து விடுகின்றனர் ஒரு சிலர் அப்பாவித்தனமாக ஏமாந்து பணம் பொருள் இழக்கின்றனர். சமீபகாலமாக அஜீத் மேனேஜர் என்று சிலர் சொல்லிக் கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக அஜீத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அஜீத் தனது வழக்கறிஞர் எம்.எஸ்.பரத் மூலமாக ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:நான்‌ அஜீத்குமார்‌ அவர்களின்‌ அதிகாரப் பூர்வ சட்ட ஆலோசகர்‌. இந்த அறிக்கை நாங்கள்‌ எங்கள்‌ கட்சிக்காரர்‌ அஜித்‌ குமார்‌ சார்பாக, கொடுக்கும்‌ சட்ட அறிக்கை ஆகும்‌.சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள்‌ பொது வெளியில்‌ ‌ கட்சிக்காரர்‌சார்பாகவோ, அல்லது. அவரது பிரதிநிதி போலவோ என்‌ கட்சிக்காரர்‌ அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள்‌ என்‌ கட்சிக்காரர்‌ கவனத்துக்கு வந்து உள்ளது.

இதைமுன்னிட்டு என்‌ கட்சிக்காரர்‌ தன்னுடன்‌ பல வருடங்களாகப் பணியாற்றி வரும்‌ அவரது மேலாளர்‌ சுரேஷ்‌ சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன்‌ பிரதிநிதி என்றும்‌ அவர்‌மட்டுமே தன்னுடைய சமூக மற்றும்‌ தொழில்‌ ரீதியான நிர்வாகி என்று,
அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்‌.மேலும்‌ தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி‌ எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும்‌ அணுகினால்‌ அந்த தகவலை சுரேஷ்
சந்திராவிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும்‌. என்றும்‌ வேண்டுக்கோள்‌ விடுகிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம்‌ தன்‌ சம்பந்தமாக யாரும்‌ தொழில்‌ மற்றும்‌ வர்த்தக ரீதியாக தொடர்பில்‌ இருந்தால்‌, அதனால்‌ ஏதேனும்‌ பாதகம்‌ ஏற்பட்டால்‌ அதற்கு என்‌ கட்சிக்காரர்‌ எந்த விதத்திலும்‌ பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது, மக்களும்‌, இத்தகைய நபர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌ படி கேட்டுக்‌ கொள்கிறார்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை