9 வருடத்துக்கு பிறகு நடிகர் ஆர்யா மீது ஜமீன் குடும்பம் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு.. கோர்ட்டில் ஆஜராக ஹீரோவுக்கு உத்தரவு..

by Chandru, Sep 18, 2020, 11:03 AM IST

விஷ்ணுவர்தன் இயக்கிய சூப்பர் ஹிட் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஹீரோயினாக நடித்த நடிகை சயீஷாவை காதலித்து மணந்தார். தற்போது இருவரும் டெடி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

நடிகர் ஆர்யா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படத்திற்கு அவதூறு வழக்கை தற்போது சந்திக்கிறார். 2011 ஆம் ஆண்டில், பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்யா நடித்தார். விஷாலும் இப்படத்தில் நடித்திருந்தார். படம் வெளியான ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் சிங்கம் பட்டி ஜமீனை அவதூறு செய்ததற்காக ஆர்யா மீது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 ஆம் தேதி ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று காலம் இன்னும் முடியாத நிலையில் அவதூறு வழக்கிற்காக ஆர்யா கோர்ட்டில் ஆஜராவா அல்லது அவன் இவன் படத்தின் வசனம் எழுதிய இயக்குனர் பாலா அவதூறு வழக்கில் இருந்து ஆர்யாவை விடுவிக்க உதவுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். ஆர்யா அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை