இளையாராஜா இசையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ...!

by Chandru, Sep 18, 2020, 12:48 PM IST

விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங் களும் நிகழ் வுகளும் கொண்ட கதை யாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

கமனம் படத்தில் பாடகி ஷைலாபுத்ரி தேவி என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனனின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளி யிட்டார் நடிகர் ஷர்வானந்த். தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்க, அழகான புன்ன கையுடன் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடிகை நித்யா மேனன் அந்த போஸ்டரில் தோற்றம் அளிக்கிறார்.சில தினங்களுக்கு முன்பு கமனம் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலருடைய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி யிருப்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப் பை கூட்டியுள்ளது.

இப்படத்திற்கு இசைஞானி இளைய ராஜா இசையமைக்க, பிரபல எழுத்தா ளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் வி.எஸ். இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத் தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். சாய் மாதவ் புர்ரா வசன் எழுதுகிறார். ராமகிருஷ்ணா அராம் எடிட்டிங் செய்கிறார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News