ரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ..!

Advertisement

நடிகை ஒருவர் ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து கேக் ஊட்டி விட்டாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் உண்மை தான். சினிமா ஹீரோக்களுக்கென்று தனி ரசிகர் வட்டம் இருப்பதுபோல் ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹீரோயின்களில் திரிஷா, நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா ஹெக்டே போன்றவர்கள் தங்களுக்கென ரசிகர்களைப் பெற்றிருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருக்க டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தினசரி தங்களது புகைப் படங்கள், தங்களது பட விவரம், சினிமா தவிர்த்து அவர்கள் பிற விஷயங்களில் கட்டும் ஆர்வம் எனப் பலவற்றை ரசிகர்களுக்காக ஷேர் செய்து தங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போகின்றனர்.

முன்னணி ஹீரோயின் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளராத அல்லது வளர்ந்து வரும் இளம் நடிகைகளும் இணைய தளத்தில் தங்களது கவர்ச்சி படங்கள், பாய்பிரண்டுடன் நடனம் ஆடும் வீடியோக்கள், ஒர்க அவுட் படங்கள் எனப் பலவற்றை வெளியிட்டு அதன் மூலம் தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு.கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளைக் கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது தனது ரசிகர்களிடம் பேசுவது உண்டு. அப்படிப் பேசும்போது இரண்டு ரசிகர்கள் தங்களது பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்தச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வாழ்த்துக் கூறிய ஷாலு ஷம்மு, அவர்கள் பற்றிக் கேட்கும் போது, அவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளைத் தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த இரண்டு ரசிகர்களும் உற்சாகமாக ஷாலு ஷம்முவுடன் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியதோடு, இதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்முவை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>