ஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் கொளுத்திப்போட்ட இசை பட்டாசு ஹாலிவுட்டில் தூள் கிளப்புது.. சவால் விட்டு சாதித்த நம்மூர் தமிழ் இசை அமைப்பாளர்..

Advertisement

இசை ஆல்பங்கள் என்பது 90கள் வரையிலும் ஹாலிவுட்டில் தான் வந்துக் கொண்டிருந்தன. சினிமா பாடல்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இசை அமைத்து அதை இசை ஆல்பமாக வெளியிட்டு வந்தனர். 2000ம் ஆண்டும் அது கோலிவுட்டிலும் பரவியது. தனி இசை அமைப்பாளர்கள் தனிப்பட்ட பாடல்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். தமிழில் இல்லாமல் ஹாலிவுட்டிலேயே போய் ஒரு ஆங்கில சிங்கிள் ஆல்பத்தை வெளியிட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார் இசை அமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் 'கோல்ட் நைட்ஸ்'. இந்த ஆல்பத்திலிருந்து 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது.

இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டுப் பாடலை கொளுத்திப்போட அது தாறுமாறு தக்காளி சோறாக ஹாலிவுட்டில் ஹிட்டாகி இருக்கிறது. துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம் பிடித்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.

ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ், ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், சக இசையமைப்பாளராக யுவன் மற்றும் இமான் ஆகியோரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் சிறப்பு. 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.

இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். ஹாலிவுட்டில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றி அடைந்துள்ளது. அடுத்து எடுத்து வைக்கவுள்ள அனைத்து அடிகளுமே வெற்றியடைய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். விரைவில் அடுத்த ஹாலிவுட் பாடல் குறித்த அறிவிப்பு வரும். அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தன் மகள் அன்வியுடன் இணைந்து கண் சிமிட்டி சிரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>