இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் பல கோணங்களில் மோதலாகவும்,கைதுகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.சுஷாந்த் வழக்கில் வலியச் சென்று கருத்துச் சொன்னார் நடிகை கங்கனா ரனாவத். இவர் இந்தி படங்களில் நடிப்பதுடன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அங்கு விலை உயர்ந்த போதைப் பொருள் இலவசமாக தரப்படுகிறது என்ற கங்கனா, போதை பொருள் தடுப்பு போலீசார் பிரபலங்களிடம் விசாரித்தால் அவர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்றார். அத்துடன் நிறுத்தாமல் மகாராஷ்டிரா ஆளும் கட்சியான சிவசேனாவை தாக்கி பேசினார். மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என்றார்.
கங்கனா இதுபோல் பேசுவது அவர் அடுத்த தேர்தலில் பாஜவின் ஸ்டார் வேட்பாளராகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத்தான் என்று சிவசேனா கட்சியினர் எதிர் தாக்குதல் நடத்தினர். மேலும் கங்கனா மும்பையில் உள்ள தனது பங்களாவில் மாநகராட்சி அனுமதி வாங்காமல் கட்டிடம் கட்டியதாக நோட்டீஸ் கொடுத்துக் கூடுதல் கட்டிடத்தை இடித்துத் தள்ளினர். சிவசேனாவினர் மீதும் பாலிவுட் மீதும் புகார்களை அள்ளி வீசிய கங்கனா தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தில் உள்ள மனாலிக்கு சென்று தங்கினார். அங்கிருந்தபடி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு வாங்கிக் கொண்டு என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கமாண்டோக்கள் படை சூழ கெத்தாக மும்பை திரும்பினார். ஆனாலும் சிவசேனா தொண்டர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். பாலிவுட் ஸ்டார்களும் கங்கனாவை தட்டிக்கேட்கத் தொடங்கினார்.
நடிகை நக்மா, உலக அளவில் மும்பைக்கும், பாலிவுட்டுக்கும் கங்கனா கெட்ட பெயர் வாங்கித் தருகிறார் என்றார். மேலும் கங்கனா போதைப் பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோவை ஆதாரமாக வைத்து அவரிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணைக்கு நடத்தத் தயார் ஆனார்கள்.கமாண்டோ பாதுகாப்புடன் வந்த கங்கனா எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இமாச்சல பிரதேசத்தில் தனது சொந்த ஊருக்கே மீண்டும் திரும்பிச் சென்றார். கங்கானாவின் பேச்சுக்கு கமல்ஹாசனின் இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா பதில் அளித்தார். அப்போது நான் மும்பை மகள். மும்பை பற்றி கங்கனா சொன்ன கருத்துக்களை என்னால் பொருத்துக்கொள்ள முடியாது. கங்கனா போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் நடத்த வேண்டும். ஏனென்றால் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவதே அங்குதான். முதலில் சொந்த ஊரை சுத்தப்படுத்தட்டும் கங்கனா எனப் பதிலடி தந்தார்.
ஊர்மிளாவின் தாக்குதல் கங்கனாவை எரிச்சல் அடையச் செய்துள்ளது. அவருக்குப் பதிலுக்குப் பதில் அளித்தார். “ஊர்மிளாவை நடிப்பால் யாருக்கும் தெரியாது. அவர் ஒரு ஆபாச நடிகை. அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆபாசத்துக்குப் பெயர் போனவர் ஊர்மிளா. நான் தேர்தலில் பா.ஜனதா கட்சியில் சீட் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன் எனக் கூறி இருக்கிறார். அவருக்கே சீட் கிடைக்கும்போது எனக்குக் கிடைக்காதா? அவரது பேச்சு அவதூறாக இருக்கிறது என்றார்.நீ ஆபாசப் பட நடிகை சர்தான் போ என ஊர்மிளாவை கங்கனாவும். உனது சொந்த ஊரில்தான் போதைப் பொருள் உற்பத்தி ஆகிறது அதை நீ முதலில் சுத்தம் செய் என கங்கனாவை நடிகை ஊர்மிளாவும் தாக்கிக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.