கேரளா தங்க ராணி போல் பிரபல நடிகை இன்னொரு தங்கராணி ஆகிறாரா? 1 கிலோ தங்க விவகாரத்தில் வெளிநாட்டு கஸ்டமர் கொடுத்த புகாரால் பரபரப்பு..

by Chandru, Sep 19, 2020, 17:07 PM IST

கேரளாவில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்களைக் கிலோ கிலோவாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்ததாக ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது. இது கடத்தல் விவகாரமென்றால் ஒரு கிலோ தங்கம் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகப் பிரபல நடிகை மீது வெளி நாட்டு கஸ்டமர் புகார் கூற பதிலுக்கு நடிகை அவர் மீது மோசடி புகார் தர இருவருக்கிடையேயான மோதல் ஒரே களபரமாகி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் ராஜ்குந்த்ரா என்பவரை மணந்தார். நடிப்பு ஒருபக்கம் மறுபக்கம் தங்க பிஸ்னஸ் என இரட்டை குதிரை சவாரி செய்தார் ஷில்பா.


மும்பையில் சத்யுக் தங்கம் என்ற நிறுவனத்தில் ஷில்பா, ராஜ்குந்த்ரா இருவரும் இயக்குனர்களாக பொறுப்பு வகித்தனர். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்க அட்டைகள் வழங்கியது. அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இத்திடத்தின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர் சச்சின் ஜோஷி என்பவர் ஒரு கிலோ தங்கம் வாங்கியதாகவும் ஆனால் ஷில்பா ஷெட்டி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீதான புகாருக்கு ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:-என் மீது பொய்யான குற்றச்சாட்டு தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சச்சின் ஜோஷி குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவருக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்து விட்டோம். ஆனால் சட்டப் பூர்வ கட்டணத்தை அவர் செலுத்தவில்லை. அதில் அவர் மோசடி செய்திருக்கிறார். அவர் கட்ட வேண்டிய பணம் பற்றிய விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் மீது காசோலை மோசடி புகார் அளித்துள்ளோம். இந்த பிரச்சனையில் விசாரித்து மத்தியஸ்தம் செய்வதற்காக கோர்ட்டு ஒரு அதிகாரியை நியமித்திருக்கிறது.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.com


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை