சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் கல்யாணி என்கிற காவேரி. விக்ரம் நடித்த காசி மற்றும் விஜயுடன் கண்ணுக்குள் நிலவு, நந்தாவுடன் புன்னகைப் பூவே பிரசாந்த்துடன் அப்பு, கடைசியாக விஜய் சேதுபதியின் கருப்பன் ஆகிய படங்களில் நடித்ததுடன் மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கல்யாணி தெலுங்கு நடிகர்- இயக்குனர் சூர்ய கிரணை காதலித்து மணந்தார். சூர்ய கிரண் தெலுங்கில் ராட்சஷடு, தொங்கா மொகடு போன்ற படங்களில் நடித்ததுடன் சத்யம். பிரம்மாஸ் திரம் போன்ற சில படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக யூகங்கள் வெளிவந்த போதிலும் அதுபற்றி இருவருமே மவுனம் காத்து வந்தனர்.
பிக் பாஸின் தெலுங்கு பதிப்பில் பங்கேற்ற சூரியகிரண் தானும் கல்யாணியும் ஒன்றாக இல்லை என்பதை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிய பின்னர் வெளிப்படுத்தினார்.
நடிகை கல்யாணி பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு விலகினார், ஆனால் அவர் இன்னும் கல்யாணியை நேசிப்பதாக கூறினார்.