தமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது

by Chandru, Sep 22, 2020, 16:47 PM IST

கொரோனா தொற்று கவனிக்காமல் விட்டால் ஆளையே சாய்த்து விடுகிறது என்பதற்குக் கடந்த காலத்தில் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.விஜய் நடித்த கில்லி, விக்ரம் நடித்த தில், தூள் போன்ற பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் ரூபன். இரண்டு முகம் உள்பட சில படங்களுக்கு கதைகளும் அளித்திருக்கிறார். நடிகர் ரூபன் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது அதுபற்றி அவருக்குத் தெரியவில்லை. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டபோது ஒரு மாதத்துக்கு முன் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தார். அப்போதுதான் அவருக்கு நுறையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

திருச்சியில் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதியாகி இருந்தார். நுரையீரலை நேரடியாகத் தாக்கும் கொரோனா தொற்றும் அவருக்கு திடீரென்று ஏற்பட்டது. நேற்று மாலை ரூபனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ரூபன் உயிரிழந்தார். பிறகு திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்தனர். ரூபனுக்கு 54 வயது. இவரது மனைவி சங்கீதா ஆவார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை