தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கட்சி திடீர் எச்சரிக்கை. தூய்மைப் பணியாளர்‌ குரலை நெறிக்க‌ பணி நீக்கம் வழக்கா?

kamals Makkal Neeethi Maiyam Statement Regarding Corpraton workers

by Chandru, Sep 22, 2020, 17:58 PM IST

நடிகர் கமல்ஹாசனின் மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி மாநிலச் செயலாளர்‌ பொன்னுசாமி (தொழிலாளர்‌ நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில்‌ சுமார்‌ 6400 நிரந்தர தொழிலாளர்களும்‌, சுமார்‌ 4500ஒப்பந்த தொழிலாளர்களும்‌ தூய்மைப்‌ பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்‌.நிரந்தர தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார்‌ 379 ரூபாய்‌ ஊதியமாக வழங்கப்பட்டு வரும்‌ நிலையில்‌ ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார்‌ 210 ரூபாய்‌ மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ முன்களப்‌ பணியாளர்களாகப் போற்றப்பட்ட தூய்மைப்‌ பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம்‌ வழங்காமல்‌ தமிழக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும்‌, ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக் கோரியும்‌ கடந்த 07.09.2020அன்று ரிப்பன்‌ மாளிகை முன்‌ தொழிலாளர்கள்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. அப்போது பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள்‌ தொழிலாளர்களுக்குச் சொற்ப அளவில்‌ (12 ரூபாய்‌) மட்டும்‌ ஊதியம்‌ உயர்த்தி வழங்குவதாக அறிவித்த உறுதிமொழியை ஏற்றுக்‌ கொண்டு போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்‌.

இந்நிலையில்‌ ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில்‌ ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள்‌ சுமார்‌ 291பேர்‌ பணி நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளதோடு, 714தொழிலாளர்கள்‌ மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருநோய்‌ தொற்று காலத்தில்‌ மக்கள்‌ பணியில்‌ சிறப்பான
முறையில்‌ செயல்பட்டு வந்த தூய்மைப்‌ பணியாளர்கள்‌ ஊதிய உயர்வு கேட்ட காரணத்திற்காகத் தொழிலாளர்களின்‌ குரல்வளையை நெறிக்கின்ற வகையில்‌ பணி நீக்கம்‌ செய்யப்பட்டதையும்‌, அவர்கள்‌ மீது வழக்குப்‌ பதிவு செய்ததையும்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ தொழிலாளர்‌ அணி சார்பில்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறோம்‌.

உரிமைகளுக்காகப் போராடியதற்காகப் பதவி நீக்கம்‌ செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும்‌ பணியில்‌ சேர்க்க வேண்டும்‌, தொழிலாளர்கள்‌ மீது பதியப்பட்ட வழக்குகள்‌ எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்‌ எனத் தமிழக அரசையும்‌, சென்னை மாநகராட்சியையும்‌ வலியுறுத்துவதோடு, தொழிலாளர்களின்‌ உரிமைகளை மீட்கத் தொழிலாளர்களின்‌ தோளோடு தோள்‌ நின்று குரல்‌ கொடுக்க தயாராக இருக்கிறோம்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்

You'r reading தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கட்சி திடீர் எச்சரிக்கை. தூய்மைப் பணியாளர்‌ குரலை நெறிக்க‌ பணி நீக்கம் வழக்கா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை