தளபதி விஜய்யை டபுள், ட்ரிப்பிள் ஆக்கிய இயக்குனரின் மற்றொரு அதிரடி.. பாலிவுட்டிலும் இரட்டை கைவரிசை காட்டுகிறார்..

by Chandru, Sep 23, 2020, 15:11 PM IST

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் அட்லீ. இந்த 3 படங்களிலுமே விஜய் இரட்டை வேடம் இன்னும் சொல்லப்போனால் மெர்சலில் 3 வேடம் என்ற அளவில் ரசிகர்களுக்கு விஜய்யின் நடிப்பையும் ஆக்‌ஷனையும் விருந்தாக்கி இருப்பார். எல்லா படங்களும் ஹிட்தான். பிகில் படத்தின் 2ம் பாகம் உருவாக்க உள்ளதாகவும் கூறினார் அட்லி. அதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தார். விஜய் வேறு படங்களில் கமிட் ஆனதால் பிகில்2 படம் தள்ளிப் போனது.

இந்நிலையில் பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். கடந்த ஒன்றரை வருடமாக அவரது கால்ஷீட்டுக்காக முயன்று வந்தார். முதலில் மெர்சல் கதையை ஷாருக்கிற்கு சொல்லி அதை ரீமேக் செய்யவிருந்தார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. வேறு ஸ்கிரிப்ட் ரெடி செய்யச் சொன்னார். அதற்காக மெனக்கெட்டு அதிரடியாக இன்டர்நேஷனல் ஸ்கிரிப்ட் உருவாக்கி ஷாருக்கிடம் கூற அது அவருக்குப் பிடித்து விட்டது. அதில் நடிக்க ஒப்புக் கொண்டு கடந்த மாதம் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். ஜேம்ஸ் பாண்ட் படப் பாணியில் சர்வதேச டிடெக்டிவ் ஸ்டோரியாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இப்படம் பற்றி மற்றொரு ஹைலைட் தகவல் வெளியாகி உள்ளது. இதில் டிடெக்டிவ்வாக ஷாருக்கான் நடிக்க அதேபோன்று சர்வதேச குற்றவாளியாக மற்றொரு கதாபாத்திரத்திலும் ஷாருக் நடிக்கிறாராம். முதல் படம் தொடங்கி 3வது படம் வரை விஜய்யை இரட்டை வேடம், மூன்று வேடம் என்று திகட்டத் திகட்ட இயக்கிய அட்லி இதே பாணியை ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் கையாள்கிறார் அட்லி.படத்தில் கமர்ஷியலாக என்னவெல்லாம் வைக்க வேண்டும் என்பது அட்லிக்கு தெரியும் அதை ஷாருக்கான் படத்திலும் அவர் மிஸ் செய்யமாட்டார் படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கும் டெக்னிக்கும் அவருக்குக் கைவந்த கலைதான்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News