பிக்பாஸ் நடிகை ரகசிய காதலனுடன் டேட்டிங் படத்தை வெளியிட்டார்.. கையுடன் கைகோர்த்து வெட்கத்தில் முகம் சிவந்த அழகு ..

Actress Yashika in Love with boyfriend

by Chandru, Sep 24, 2020, 10:05 AM IST

நோட்டா, கழுகு 2, ஜாம்பி போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.கமலின் 'பிக் பாஸ் 2' ரியாலிட்டி ஷோவில் யாஷிகா போட்டியாளராகப் பங்கேற்றார். பிறகு மேலும் பிரபலம் ஆனார். சமூகவலைத்தளத்தில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தினமும் பகிர்ந்துகொள்கிறார். கவர்ச்சி படங்கள் மட்டுமல்லாமல் மங்களகரமாக சேலை கட்டி அசத்தலான அழகான படங்களும் வெளியிடுகிறார். யாஷிகா காதலில் விழுந்திருக்கிறார்.

சமீபத்தில் யாஷிகா ஒரு புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் யாஷிகாவும் ரகசிய காதலனும் ஒருவரையொருவர் கையை பிடித்துக்கொண்டு இருக்க அதில் யாஷிகா மட்டும் ஒரு பக்கம் கண்ணை மறைத்துக்கொண்டு வெட்கம் பொங்கி வழியச் சிரிக்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் நபரின் கை மட்டுமே தெரிகிறது முகம் தெரியவில்லை. படத்தின் ஓரத்தில் டேட்டிங் என குறிப்பிட்டிருக்கிறார். யாஷிகாவின் கையை பிடித்திருக்கும் நபர்தான் அவரது ரகசிய காதலனாம். யாஷிகாவின் ரசிகர்கள் யார் அந்த லக்கி ரகசிய காதலன் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் யாஷிகா கப்சிப் என்று வாய் மூடி மவுனமாக இருக்கிறார்.

You'r reading பிக்பாஸ் நடிகை ரகசிய காதலனுடன் டேட்டிங் படத்தை வெளியிட்டார்.. கையுடன் கைகோர்த்து வெட்கத்தில் முகம் சிவந்த அழகு .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை