ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசி சாட்டையை கையில் எடுக்கிறார்.. யார் முதுகுதோல் உரியும் என்பது படத்தில் தெரியும்..

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இடம் பெறும் பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு உண்டு. நா ஒரு தடவ சொன்னா நூறு தடவச் சொன்ன மாதிரி,
என் வழி தனி வழி சீண்டாதே, நா எப்ப, வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்று பல வசனங்கள் மிகவும் பிரபலம். இதில் பல வசனங்கள் ரஜினியே எழுதிய வசனங்கள் எனலாம். லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவேன் என்ற வசனதை ரஜினிக்காக அவரது ரசிகர் எழுதியது.
ரஜினியின் பஞ்ச் வசனங்கள் பிரபலம் ஆனதால் எல்லா ஹீரோக்களுமே தங்கள் படங்களில் பஞ்ச் வசனம் பேசத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அதை காமெடி நடிகர்களும் பயன்படுத்தும் அளவுக்கு வந்ததால் ரஜினி பஞ்ச் வசனம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அதன்பிறகு வசனங்களை இயக்குனர் வசமே விட்டுவிட்டார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

சமீபகாலத்தில் ரசிகர்கள் தாங்கள் ரஜினிக்காக அச்சிடும் போஸ்டர்களில் ரஜினியின் பழைய வசனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு புது உற்சாகம் கொடுக்க அண்ணாத்த படத்தில் மீண்டும் தனது பழைய பாணியான பஞ்ச் வசனம் பேச முடிவு செய்துள்ளார். இதற்காக அவரே பஞ்ச் வசனம் எழுதி அதைப் பட இயக்குனர் சிவாவிடம் தனது பாணியில் சொல்லிக்காட்ட அவர் அதை மிகவும் ரசித்தாராம். அந்த வசனத்தைப் படத்தில் தகுந்த இடத்தில் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கள் தடைப்பட்டிருக்கிறது.

தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. ஜனவரி முதல் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாக உள்ளது.
இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். குஷ்பு, மீனா முறைப் பெண்ணாக நடிக்க உள்ளனர். கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், சூரி, சதீஷ் ஆகியோருடன் வில்லனாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.நல்லவனுக்கு நல்லவன், ஆறிலிருந்து அறுபது வரை போல் அண்ணாத்த படம் குடும்ப சென்டிமென்ட் படமாகவும் லேசாக அரசியல் டச் உடன் இருக்கும் என்று தெரிகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>