லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்ஸன் மதராஸ பட்டணம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். பெரிய நடிகர்களுடன் நடித்தபோதும் மார்க்கெட் சரிந்திருந்தது. கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அந்த படம் வெளியான பிறகு புதிய படத்தில் ஒப்புக்கொள்வது என்ற முடிவோடு இருந்த நிலையில் பட ரிலீஸுக்காக காத்திருந்தார். ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் லண்டன் சென்றார். அங்கு எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. காதலன் ஜார்ஜூடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்த நிலையில் எமி கர்ப்பம் அடைந்தார். திருமணம் செய்யாமலே குழந்தையும் பெற்றார். குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டார்.
நாட்கள் கண்மூடித்தனமாக வேகமாக நகர்ந்து தற்போது ஆண்டிரியாஸ் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. குழந்தையின் முதல் பிறந்த தினத்தை கொண்டாட எமியும், அவரது காதல் கணவர் ஜார்ஜும் தாம் தூம் ஏற்பாடுகள் செய்து கொண்டாடினர். இதற்காக பிரத்யேகமாக அலங்காரங்கள் செய்தனர். அந்த இடத்தில் ஆண்டிரியாஸின் பிறந்த நாளை மேற்கத்தியப் பாடல் பாடி கொண்டாடினார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருக்கிறார் எமி.
குழந்தைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தை பிறந்த நாளில் எமிஜாக்சன் கூறும்போது, அம்மாவானதை எண்ணும்போது ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் என்னை நான் உணர்கிறேன். குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறப்பதற்கு முன் என் வாழ்க்கையை எண்ணிப் பார்க்க விரும்பவில்லை. அது அர்த்தமற்றதாக இருந்தது. என் தேவதை, என் குழந்தையைத் தினமும் காலையில் பார்க்கும்போது மிகுந்த உற்சாகம் அடைகிறேன். அவனுக்கு ஒரு ரோல் மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார் எமி.