ஹாலிவுட் ரம்போ பட ஹீரோ தாயார் 98 வயதில் மரணம்..

Hollywood hero Sylvester Stallones mother

by Chandru, Sep 24, 2020, 15:29 PM IST

ராக்கி, தி ஸ்பெஷலிஸ்ட், ராம்போ எனப் பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக அளவில் ரசிகைகளைக் கொண்டிருப்பவர் சில்வர் ஸ்டர் ஸ்டலோன். இவரது தாயார் ஜாக்கி ஸ்டேலோன், 98 வயதாகும் அவர் காலமானார். இந்த தகவலை சில்வர் ஸ்டலோன் சகோதரர் ஃபிராங்க் ஸ்டலோன் வெளியிட்டார்.தாயார் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்கூறியதாவது: இன்று காலை எனது சகோதரர்களும் நானும் எங்கள் அம்மா ஜாக்கி ஸ்டலோனை இழந்தோம். டாமி, சில்வெஸ்டர், பிரான்கி மற்றும் எனது மறைந்த சகோதரி டோனி ஆன் ஆகிய நான்கு குழந்தைகளுக்கு அவர் தாயாக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க பெண் மணி. அவர் மிகவும் விசித்திரமான மற்றும் சுறுசுறுப்பானவர்.

நவம்பர் 29, 1921 அன்று வாஷிங்டன் டி.சி.யில் பிறந்தார், இரண்டாம் உலகப் போரின்போது அவர் தடை செய்யப்பட்ட பகுதியில் தனது வாழ்நாளை அப்போது கழித்தார். 1920 மற்றும் 30 மற்றும் 40களில் நடந்த வரலாறுகள் பற்றி அவரிடம் நான் பல மணி நேரம் பேசுவேன். அதுவொரு வரலாற்றுப் பாடம். அவர் இறக்கும் நாள் வரை முக கவசம் அணியவில்லை. அவள் ஒரு ரேஸரைப் போல கூர்மையான குணம் கொண்டவர். தூங்கும்போதே இறக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அப்படியே அவரது இறுதி மூச்சு பிரிந்தது. நான் என் உணர்ச்சிகளை கண்ணீரில் மூழ்கடித்து விடுகிறேன் என்று நினைக்கிறேன். என் அம்மாவுக்கு ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் 3 கொல்லு பேரக்குழந்தைகள் உள்ளனர். வாழ்நாள் முழுவதும் ராணி போல் அவர் வாழ்ந்தார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை