இமைக்கா நொடிகள் நடிகர் மற்றும் இயக்குனர் மீது பலாத்கார வழக்கு பதிவால் பரபரப்பு.. நடிகை வழக்கில் கைது செய்ய திட்டம்?

FIR filed against Anurag Kashyap after actor alleges rape

by Chandru, Sep 24, 2020, 18:52 PM IST

தமிழில், இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருப்பவர் அனுராக் காஷ்யப். இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்கள் இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் ரீதியாக தனக்குத் தொல்லை தந்ததாக சில நாட்களுக்கு முன் புகார் கூறினார். ஆனால் அதை அனுராக் மறுத்திருந்தார். மேலும், நடிகைகள் டாப்ஸி. ராதிகா ஆப்தே, ஹூமா குரோஷி, கல்கி கொச்சலின் மற்றும் அனுராக் மனைவி ஆகியோர் அனுராக் பற்றி ஆதரவாகப் பேசி அவர் பெண்களுக்கு எதிரான செயல்களை எதிர்ப்பவர் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுப்பவர் என்றனர்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் மீது நடிகையும் அவரது வழக்கறிஞருமான நிதின் சத்புட் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இயக்குனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரம், தவறான கட்டுப்பாடு, கட்டாயமாக அடைத்து வைத்தல், பெண்ணின் மீது அத்துமீறல் ஆகிய குற்றம் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராக் மீது எப் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் நோடீஸ் அனுப்பி உள்ளனர். அவரை போலீசார் கைது செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.அனுராக் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து அவரது வக்கீல் கூறும் போது, அனுராக் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார். அதை அடக்கவே அவர் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை