கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். நடிகை திரிஷா தனது நடிப்பைக் காப்பி அடிப்பதாகவும் கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மிதுனை கடுமையாகக் கண்டித்தார். அவர் இதுபோன்ற அவதூறு பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். ஆனாலும் அவர் திடீரென்று கமல்ஹாசன் மீது புகார் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவுக்கு வருவதற்கு முன் மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து வந்தார். அப்போது மாடலிங் துறையில் பல்வேறு பாலியல் தொல்லைகள் நடந்ததாகக் கூறினார்.
இந்நிலையில் மீரா மிதுன் மீது கேரளா போலீசில் பெண் வழக்கறிஞர் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில்,மீரா மிதுன் நிஜபெயர் தமிழ் செல்வி. அவர் சமீபகாலமாக மலையாளிகளைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
புகாரின் பேரில் மீரா மீதுன் மீது ஜாமினில் வெளியில் வரமுடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.கேரளாவில் இடுக்கி போலீசார் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி சப் இன்ஸ்பெக்டர் பிஜூ ஜாக்கப் கூறும்போது,பெண் வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தொடுபுழா போலீசார் இதுபற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது என்றார்.