எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்..

Singer SPBalasubramaniyam Pasess away today

by Chandru, Sep 25, 2020, 13:46 PM IST

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது. உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிர்காக்கும் கருவிகளான வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி.பி குணம் அடைவதற்காக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். மருத்துவமனை டாக்டர்களும் வெளிநாட்டு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். அது பலன் அளித்தது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது பற்றி மருத்துவமனையும். எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அறிக்கை முலம் தெரிவித்து வந்தனர். எஸ்பிபி ஐபேட்டில் கிரிக்கெட் டென்னிஸ் பார்க்கிறார், எழுதிக் காட்டி தனது தேவைகளைத் தெரிவிக்கிறார். பிசியோ தெரபி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருகிறார். மருத்துவர்களின் உதவியுடன் படுக்கையில் இருந்து எழுந்து 20 நிமிடம் வரை அமர்ந்திருக்கிறார். உணவு சாப்பிடுகிறார் என பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களைச் சரண் தெரிவித்தார்.ஆனாலும் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தான் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது என்ற கவலையான தகவலும் தெரிவித்தார்.

நுரையீரல் நன்கு குணம் ஆகி வந்த நிலையில் நேற்று முதல் அது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மருத்துவமனை நேற்று மாலை ஒரு அதிர்ச்சியான அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் திரையுலகினர், குடும்பத்தினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த தகவலை அறிந்து நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு மருத்துவமனைக்கு விரைந்து சென்று எஸ்பிபியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.பின்னர் அவர் வெளியில் வந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எஸ்பிபி நலமாக இல்லை. உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

எஸ் பி பி உடல் நிலை தேறிவந்த நிலையில் நேற்று கவலைக்கிடமானது.இந்நிலையில் இன்று காலை முதல் மருத்துவமனையில் துக்கம் சூழ்ந்தது. இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம். மருத்துவமனை சற்றுமுன் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சென்னை சூளைமேட்டில் உள்ள MGM மருத்துவமனை வளாகம் உள்ளேயும், வெளியிலும் ஆயுதப்படை காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இளையராஜா, பாரதிராஜா போன்று திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.அதன் காரணமாக MGM மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பலசுப்பிரமணியம் குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் மற்றும் குடும்பத்தினர்மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி, சகோதரி எஸ் பி சைலஜா மருத்துவமனை வந்துள்ளனர் அவர்களிடம். மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். சென்னை சூளைமேட்டில் உள்ள MGM மருத்துவமனை வளாகம் உள்ளேயும், வெளியிலும் ஆயுதப்படை காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக இளையராஜா, பாரதிராஜா போன்று திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக MGM மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீடியாக்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:எஸ்பிபி நலம் பெறுவதற்காகப் பல கோடிப்பேர் பிரார்த்தனை செய்தோம் ..ஆனால் பலன் கிடைக்கவில்லை என்றார்.எ'ஸ் பி. பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைக்கு பிறகு பலனில்லாமல் காலமானார்' என்று அவரது மகன் எஸ் பி சரண் சற்று முன் தெரிவித்தார்.

You'r reading எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை