பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தும், அவரது பெருமைக்குப் புகழாரம் சூட்டியும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இன்னிக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிடம் வரை உயிருக்காகப் போராடி மதிப்பிற்குரிய எஸ்பிபி அவர்கள். நம்மல விட்டு பிரிஞ்சிருக்காங்க. அவரது மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்பியின் குரலுக்கும் அவரது பாட்டுக்கும் ரசிகர்களே இல்லாமல் இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அவருக்கு தெரிஞ்வங்க அவரது குரலவிட அவரது பாட்ட விட அவரையே அதிமா நேசிச்சாங்க அதுக்கு காரணம் அவரது மனித நேயம். அவர் எல்லாரையும்.. சின்னவங்க, பெரியவங்கன்னு பாக்காம மதிச்சாங்க கவுரவம் கொடுத்தாங்க, அன்பு கொடுத்தாங்க. அவ்வளவு பெரிய ஒரு நல்ல அன்பான அருமையான ஒரு மனிதர்.
இந்தியத் திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடகர்கள உருவாக்கி இருக்கிறது. முகமது ரஃபி அவர்கள், கிஷோர் குமார் அவர்கள், கண்டசாலா அவர்கள், டி.எம் சவுந்தராஜன் அவர்கள். அவர்களுக்ககெல்லாமே இல்லாத ஒரு சிறப்பு நம் எஸ்பிபிக்கு இருக்கிறது. அது என்னன்னா அவங்க எல்லாமே அந்தந்த மொழியில மட்டும்தான் பாடினாங்க. அந்தந்த பாஷை காரங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பல லேங்குவேஜ்ல, பல பாஷையில் பாடினாங்க.
இந்தியாவிலே இருக்கிற அனைவருக்குமே அவரை தெரியும் , முக்கியமா தென்னிந்தியாவிலே ரசிகர்களே இல்லாம இருக்க மாட்டாங்க. அவ்ளோ வந்து ரசிச்சாங்க. அவருடைய அந்த இனிமையான, கம்பீரமான அந்த குரல் இன்னும் நூறு ஆண்டு ஆனா கூட நம்ம மத்தியிலே, நம்ம காதுகல்ல வந்து ஒலிட்சிகிட்டே இருக்கும். ஆனா அந்த குரலுக்கான உரிமையாளர் இனிமே நம்ம கூட இல்லன்னு நினைக்கும் போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மிகப் பெரிய ஆத்மா, மிகப் பெரிய பாடகர், பெரிய ஒரு மகான். அவருடைய ஆத்ம சந்தி அடையணும். அவங்க குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு ரஜினி தெரிவித்திருக்கிறார்.