24 காவலர் மரியாதையுடன் 72 குண்டு முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம்.. பாரதிராஜா, நடிகர் விஜய், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..

திரைப்பட பின்னணி பாடகர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. உடனே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்குச் சென்றார் எஸ்பிபி.

பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனா தொற்று குணம் அடைந்தது. படிப்படியாக உடல்நிலை குணம் அடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. நேற்று 1.04 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல் நேற்று சென்னையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ரசிகர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் எஸ்பி பி உடல் தாமரைப் பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்குத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் எஸ்பிபி உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் பாண்டிய ராஜன் அஞ்சலி செலுத்தினார். டைரக்டர் பாரதிராஜா, அமீர், நடிகர் விஜய், மயில்சாமி போன்றவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது சம்பிரதாய முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டது. பண்ணை வீட்டுக்கு வெளியில் நூற்றுக்கணக்கான ரசிகர் அஞ்சலி செலுத்த திரண்டிருந்தனர். அவர்களில் சிறு பகுதியினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி நெருங்கிய உறவினர்கள். திரையுலக பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக எஸ்பிபிக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடத்த வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று முதல்வர் பழனிசாமி எஸ்பிபி உடலுக்கு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார். காலை 10 மணிக்கு உடல் அடக்கம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பிரதாய சடங்குகள் நடந்தன. குடும்பத்தினர் சடங்குகளில் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாகச் சடங்குகள் நடந்தன. மகன் எஸ்பி.சரண் சடங்குகளை முன்னின்று செய்தார்.

பின்னர் அவரது உடல் 300 அடி தூரத்தில் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு போலீஸ் மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. பொது மக்களும், ரசிகர்களும் திரையுலகினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் டாக்டர் எஸ்பிபி வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.அடக்கம் செய்யும் இடத்துக்கு எஸ்பிபி உடல் எடுத்து வந்தவுடன் சீருடை அணிந்த 24 காவலர்கள் மரியாதையுடன் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு 72 குண்டுகள் முழங்கப்பட்டது. பின்னர் இசை முழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்குத் தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் பகல் 12. 30 மணி அளவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :