படப்பிடிப்புக்கு ஜாலியாக வந்த நடிகைக்கு அமுக்கி பிடித்து கொரோனா டெஸ்ட்..மூக்கில் குச்சியை விட்டு ஆட்டியதில் வலியால் கதறல்..

Advertisement

கொரோனா ஊராடங்கால் திரைப்படவுலகம் பாதிக்கப்பட்டது. கடந்த 5 மாதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில்தான் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடத்தவும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ், தெலுங்கு. இந்தி படங்களின் படப்பிடிப்புகள் முழு அளவில் தொடங்காவிட்டாலும் பெரும் பகுதி படப்படிப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள், டெக்னீஷின்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இப்படித்தான் நடிகை பாயல் ராஜ்புத்துக்கு படப்பிடிப்பில் பங்கேற்க அழைப்பு வந்ததும் அவர் ஜாலியாக வீட்டிலிருந்து புறப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை நடந்துக்கொண்டிருந்தது. ஷூட்டிங்கிற்கு பதில் இடம்மாறி வந்து விட்டோமா என்று யோசித்தார். ஆனால் அங்கிருந்த படக்குழுவினர் அவரை வாங்க என்று அழைத்து முதலில் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றனர். ஒகே என்று சொல்லிவிட்டு டெஸ்டுக்கு ரெடியானார் பாயல் ராஜ்புத்.

லேப் டெக்னீஷியன் ஒருவர் கொரோனா கவச உடை அணிந்துக் கொண்டு கையில் ஏதோ குச்சி போன்ற ஒன்றை எடுத்து வருவதை பார்த்தும் பயந்துவிட்டார் நடிகை பாயல். ஒன்றும் பயப்படாதீங்க சின்ன டெஸ்ட்தான் என்றபடி அவர் மூக்கில் குச்சியை விட்டுகுடைந்தார். வலியால் பாயால் ராஜ்புத் கத்தியே விட்டார். இரண்டு மூக்கிலும் டெஸ்ட் எடுப்பதற்குள் அவருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இந்தி படம் வீர் கி வெட்டிங் படப்பிடிப்பிற்காக சென்ற பொது இந்த சம்பவம் நடந்தது. அதை நடிகை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
பாயல் ராஜ்புத் தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.


கொரோனா பாதிப்புக்கு ஏற்கனவே நடிகைகள் ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன். நிக்கி கல்ராணி, ஷர்மிளா மந்த்ரே, சுமலதா எம்பி போன்றவர்களும் நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால் அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>