எஸ்பிபிக்கு பாரத் ரத்னா கேட்டு கோரிக்கை வலுக்கிறது,, திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசை அமைப்பாளர்..

Bharath Rathna For SP.Balasubramaniyam: Film Indistry

by Chandru, Sep 27, 2020, 10:03 AM IST

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக பாடகர், இசை அமைப்பாளர் என்று தன் வாழ்நாளை இசைக்காக அர்பணித்தவர் எஸ்.பி.பலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்கநிலைக்கு சென்றார் எஸ்பிபி.
எஸ்பிபி குணம் அடைய திரையுலகினர் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். மருத்துவமனை டாக்டர்கள் சர்வதேச டாக்டர்களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். படிப்படியாக எஸ்பிபி உடல்நிலை குணம் அடைந்தது. மயக்க நிலைக்கு சென்றுவிட்ட எஸ்பிபி பிறகு அதிலிருந்தும் மீண்டார். ஐபேட்டில் வைத்து கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ரசித்துப் பார்த்து வந்தார். சைகை மூலம் பேசினார்.

பிஸியோதெரபி சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு தந்தார். அவராகவே சாப்பிடவும் தொடங்கினார். தனது தந்தைக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டார் ஆனாலும் சுவாசம் சீராகவில்லை நுரையிரல் சீராவதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதால் அவருக்கு வென்ட்டிலேட்டரில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தரப்படுகிறது என்று மகன் சரண் தெரிவித்து வந்தார்.
விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில் செப்டம்பர் 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது உடல் சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் தாமரைபாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று போலீஸ் அணிவகுப்பு மரியதையுடன் உடல் அடக்கம் நடந்தது.


திரையுலகை சேர்ந்த ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திரங்கள் கொரோனா தொற்று கட்டுப் பாடு காரணமாக யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. டைரக்டர் பாரதிராஜா, சீமான், இசை அமைப்பாளர்கள் தினா, டி.இமான், நடிகர்கள் விஜய், அர்ஜூன். மயில்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இசை இசை அமைப்பாளர் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார். அத்துடன் எஸ்பிபிக்காக அஞ்சலி பாடல் ஒன்றைம் பாடி வெளியிட்டார்.


எஸ்பிபாலசுப்ரமணியம் ஏற்கனவே 6 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். பதம்ஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் கூறும்போது. எஸ்பி பாலசுப்ரமணியம் பல விருதுகளை பெற்றிருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள் என்றார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் எஸ்பிபிக்கு பாரத்ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றார்.
இசை அமைப்பாளர் கங்கை அமரன் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பர் அவர் கூறும் போது,பாரத ரத்னா விருது குழுவில் நான் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். எஸ்.பி.பிக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.

You'r reading எஸ்பிபிக்கு பாரத் ரத்னா கேட்டு கோரிக்கை வலுக்கிறது,, திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசை அமைப்பாளர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை