கட்டிப்பிடித்து ஷோபாவில் தள்ளி கசமுசா செய்த இயக்குனர்.. போலீசில் பிரபல நடிகை பரபரப்பு புகார்..

Advertisement

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருக்கிறார். இவர் பட வாய்ப்பு தருவதாக அழைத்து தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை பாயல் கோஷ் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
முன்னதாக சில வாரங்களுக்கு முன் இந்த குற்றச்சாட்டை கூறிய அவர் இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் தகவல் வெளியிட்டார். சமீபத்தில் அனுராக் காஷ்யப் தன்னை பலவந்தப்படுத்தியதாக பெயரைக் கூறினார். ஆனால் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக அவரது 2 மனைவிகள் மற்றும் நடிகைகள் ராதிகா ஆப்தே, டாப்ஸி போன்றவர்கள் கருத்து தெரிவித்தனர். அனுராக் காஷ்யப்பும் பாயல் கோஷ் சொன்ன குற்றச்சாட்டை மறுத்தார். எந்த வித ஆதாரமும் இல்லாமல் பாயல் சொல்வது பெய்யான தகவல். நான் பெண்கள் அதிகாரத்துக்காக குரல் கொடுத்து வருகிறேன் என்றார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாயல் கோஷ் மும்பை வெர்சோவா போலீசில் தனது வழக்கறிஞருடன் சென்று புகார் அளித்தார். தற்போது அவர் புகாரில் தெரிவித்துள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


அவர் அதில் கூறியிருப்பதாவது:
பட வாய்ப்புக்காக நான் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை 3 முறை சந்ததித்திருக்கிறேன். அவருடன் இரவு உணவு சாப்பிட்டேன். பிறகு புறப்பட தயாரான போது இன்னும் சிறிது நேரம் இருக்கும் படி கூறினார். நான் வேறு காரணம் கூறி விட்டு புறப்பட்டு விட்டேன். பிறகு அவர் எனக்கு மெசேஜ் அனுப்பி பட வாய்ப்பு பற்றி பேச வேண்டும் எனது வீட்டுக்கு வா என்று அழைத்தார். நான் அவரை பார்க்க வீட்டுக்கு சென்றேன் அவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார். ஒரே நாற்றமாக இருந்தது என்னவென்று கேட்டேன் கஞ்சா என்றதுடன் எனையும் புகைக்க கேட்டார். எனக்கு பதற்றமாகவே இருந்தது திடீரென்று என்னை அங்கிருந்த ஷோபாவில் தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் போராடியபடி கத்த முயன்றேன். அவர் என் வாயை பொத்திவிட்டார். என்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பினேன்.
இந்த சம்பவத்தால் எனக்கு பயமும் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. யாரிடமும் உடனடியாக சொல்லவில்லை. பிறகு என் மேனேஜர், கார் டிரைவரிடம் இதுபற்றி கூறி போலீசில் புகார் அளிக்க எண்ணினேன். ஆனால் சிலர் புகார் அளித்தால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றனர்.


மீடு இயக்கம் வந்தபோது தங்களுக் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப் படையாக நடிகைகள் துணிச்சாலாக பேசினர். அது எனக்கு தைரியம் தந்தது. எனது சகோதரி மற்றும் உறவினர்களுடன் பேசி தற்போது போலீசில் புகார் அளித்திருக்கிறேன்.
இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்திருக்கிறார்.
நடிகையின் புகாரின்பேரில் அனுராக் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரனை நடக்கவிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>