முதல் வெற்றியை சுவைத்த கொல்கத்தா!

first win by kolkatta in IPL match

by Loganathan, Sep 27, 2020, 11:13 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் அபுதாபியில் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி இந்தாண்டு ஐபிஎல் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க இணையான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

கம்மின்ஸ் வீசிய 4 வது ஓவரில் , பேட்டிங்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ போல்டாகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் அணியின் ஸ்கோரை "டிக்டாக் மன்னன் " வார்னரும் , மனீஷ் பாண்டேவும் இணைந்து ஆமை வேகத்தில் ஆடினர். இதனை சரியாக புரிந்து கொண்ட தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியை பந்து வீச அழைத்தார்.

வருண் கூக்லி வீச , அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார் வார்னர். பின்னர் இணைந்த பாண்டே மற்றும் சஹா இருவரும் இருபது ஓவர் போட்டி என்பதையே மறந்து டெஸ்ட்டை விட மெதுவாக விளையாடினார்கள்.

9.1 ஓவரில் வார்னர் ஆட்டமகழக்கும் போது ஹைதராபாத் அணி 59/2 என்ற நிலையில் இருந்தது . கையில் 8 விக்கெட் இருக்க பாண்டேவும் , சஹவும் இணைந்து 44 பந்துகளுக்கு 62 ரன்களை அடித்தனர். மிகப்பெரிய ரன்களை அடிக்க வாய்பிருந்தும், ஹைதராபாத் அணி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது.

மனீஷ் பாண்டே 38 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்து 51 ரன்களை கடந்தார். கொல்கத்தா அணியின் பந்து வீச்சு மெச்சி கொள்ளும் அளவிற்கு இல்லையென்றாலும் , கேப்டன் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் மட்டும் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தார். அதனால் கொல்கத்தா அணிக்கு நல்ல பயனும் கிடைத்தது. இருபது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 142/4 ரன்களை எடுத்தது.

143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் வழக்கம்போல் டக் அவுட் ஆகி வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சுனில் நரேனால் அவரின் எதார்த்தமான ஆட்டத்தை கூட வெளிபடுத்த முடியவில்லை . கேப்டன் தினேஷ் கார்த்திக் அவர்களே நரேனை வேறு இடத்தில் இறக்க முயற்சிக்கலாம்.

பின்னர் கில் உடன் கைகோர்த்து ரானா அதிரடியை காட்ட தொடங்கினார். அவர் 13 பந்தில் 6 பவுண்டரியை விளாசி 26 ரன்களை விளாசி நடராஜன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் அவுட்டானார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் சோபிக்காத பட்சத்தில் மோர்கனும் , கில்லும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். எளிய இலக்கை எந்தவித அழுத்தமும் இல்லாமல் நேர்த்தியாக இருவரும் விளையாடினர் . ஹைதராபாத் அணியின் 6 பந்து வீச்சாளர்கள் வீசியும் அவர்களால் எதிரணியின் மீது தாக்குதலை நடத்த முடியவில்லை. நபியை தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை . எனவே மிக எளிதான முறையில் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி.

கேப்டனாக தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டார் .

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்..

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Ipl league News

அதிகம் படித்தவை