1100 நாள் காதல் பிரபல நடிகர், நடிகை திருமணம் செய்ய முடிவு

Malayalam actors Kichu Tellus, roshna get married

by Nishanth, Sep 27, 2020, 15:36 PM IST

1100 நாளாக காதலித்து வந்த பிரபல மலையாள நடிகர் கிச்சு டெல்லஸ் மற்றும் நடிகை ரோஷ்னா ஆகியோர் விரைவில் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கிச்சு டெல்லஸ். இவர் நடிகர் மட்டுமல்ல, பல சினிமாக்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர் முக்கிய வேடத்தில் நடித்த 'அங்கமாலி டைரீஸ்', 'தண்ணீர் மத்தன் தினங்கள்' உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடியுள்ளன.


இவரும் நடிகை ரோஷ்னாவும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். ரோஷ்னா ஒமர் லுலு இயக்கிய 'அடார் லவ்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர 'பாவம் செய்யாதவர் கல்லெறியட்டே', 'தமாக்கா' உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதை நடிகை ரோஷ்னா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 1100 நாட்களாக கிச்சுவுடன் தொடர்ந்து வந்த காதல் திருமணத்தில் முடிய உள்ளது. அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ரோஷ்னா குறிப்பிட்டுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை