அன்னக்கிளிக்கு முன் தொடங்கி தமிழரசனில் இறுதியான எஸ்பிபி. இளையராஜா இசைப்பயணம்..

SPB Last song with Ilayaraja in Thamizharasan movie

by Chandru, Sep 27, 2020, 15:45 PM IST

இசைஞானி இசையில் பாடும் நிலா பாடிய கடைசி பாடல்..
இசைஞானி இளையராஜா சினிமாவுலகுக்கு வருவதற்கு முன்பிருந்தே எஸ்பியுடன் நெருக்கமான நட்பு உண்டு இருவரும் மேடைக் கச்சேரிகளில் அப்போது இணைந்து இசைவிருந்து அளிப்பார்கள். அன்னக்கிளி படத்துக்கு இசை அமைத்து ஒரே இரவில் இசை உலகின் ராஜாவானார் இளையராஜா. அதன்பிறகு அவரது இசையில் எஸ்பிபி பாடிய பாடல்கள் விண்ணைத்தாண்டி புகழ் பெற்றது. 80களில் தொடங்கி 90 கள் இறுதிவரை இவர்களின் சாம்ராஜ்யம் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தது.
பின்னர் நீண்ட காலமாக இசைஞானி இளையராஜா இசையில் பாடாமல் இருந்தார் எஸ்.பி.பி. வெகு நாட்களுக்கு பிறகு இளையராஜா இசையில் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், பெப்சி சிவா அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்தில் இடம்பெறும்.


" நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்... திடமாய்...
எழுவாய் என் மகனே.
என்ற பாடல் தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் பதிவின்போது இளையராஜாவும் எஸ்பிபியும் தொழில் நேர்த்தியாக தங்களின் பணிகளை நேரத்தை வீணடிக்காமல் செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. என்னாதான் நண்பர்கள் என்றாலும் தொழில் என்று வந்தவுடன் அதை கடவுளுக்கு நிகராக இருவரும் கருதியதால் தான் காலங்கள் கடந்து அவர்களின் புகழின் உச்சியிலேயே இருக்கிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை