எஸ்பிபிக்கு நினைவு மண்டபம்.. சமாதியில் அஞ்சலி செலுத்த அனுமதி.. மகன் எஸ்பிபி சரண் தகவல்..

Advertisement

திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக 45 ஆயிரத்துக்கும் மேலாக பாடல் பாடியதுடன், இசை அமைப்பாளராக வும், டப்பிங் மொழி கலைஞராகவும் நடிகராகவும் பன்முக தன்மை கொண்ட வராக திகழ்ந்தவர் எஸ்பி.பலசுப்ர மணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட் டார். தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில் ஆகஸ்ட் 13ம் தேதி அவரது உடல் நிலை கவலைக்கிட மானது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி வென்டி லேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மயக்க நிலைக்கு சென்றார் எஸ்பிபி.


எஸ்பிபி குணம் அடைய திரையுலகினர் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய் தனர். மருத்துவமனை டாக்டர்கள் சர்வதேச டாக்டர் களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். படிப்படியாக எஸ்பிபி உடல்நிலை குணம் அடைந்தது.
விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலை யில் அவரது உடல் நிலை திடீர் கவலைக்கிடமாகி செப்டம்பர் 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது உடல் சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் தாமரைபாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் உடல் அடக்கம் நடந்தது.
எஸ்பி.பாலசுப்ரமணியதுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அவரது மகன் எஸ்பி.பி சரண் தெரிவித் திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும் போது,தாமரைப்பாக்கத்தில் எனது தந்தை எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதுபற்றி போலீசாரிடம் பேசி அனுமதி பெற்ற பிறகு தெரிவிக்கப்படும். அப்பா புதைக்கப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.என்றார்.


முன்னதாக எஸ்பிபிக்கு பாரத் ரதனா விருது வழங்க வேண்டும் என்று நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் குரல் எழுப்பி உள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருக் கிறது. அதுபற்றி முதல்வர் முடிவெடுப் பார் என்று செய்து துறை அமைச்சர் கடப்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>