பிக்பாஸ் நடிகருடன் இணையும் மிஸ் இந்தியா.. வெப்பம் பட இயக்குனரின் வெற்றி..

Advertisement

நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலிகான். இவர் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தைத் தயாரிக்கிறார். முகேன் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முகேன் மலேசியாவைச் சேர்ந்தவர்.

கமலின் பிபாஸ்3 ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர். மற்றும் அனு கீர்த்தி ஹீரோயின்
இயக்குநர் அஞ்சனா அலிகான் படம் குறித்து கூறியதாவது:இது எனக்குக் கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது. இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும்.

வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான். வாழ்வின் இடர்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனிதத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை. முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு எதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுத்தனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாகக் கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இப்பட கதாப்பத்திரத்தின் குணத்துடன் ஒத்துப்போகக் கூடியவர். முகேன் ராவ் உணர்வுகளை எளிதாகக் கையாளும் அதே நேரம், ஆக்ஷன் காட்சிகளையும் எளிதாகச் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன். மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ராண்டி எனும் ரத்னவேலு மற்றும் ஆண்டனி ஆகியோருடன் 25 ஆண்டுக்கால பழக்கம் எனக்கு. அவர்கள் “வெற்றி” படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி.

இப்படத்தின் திரைக்கதை கேட்டவுடனே இப்படத்தில் பணியாற்ற இருவரும் ஒத்துக்கொண்டார்கள் ஏனெனில் ரசிகர்களை எளிதாகக் கவரும் தன்மையுடன் அவரவர் துறைகளில் பல புதுமைகளைப் படைக்க நிறைய வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தது. ரத்னவேலு இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்குபவர். இந்திய அளவில் கவனம் பெற்ற எந்திரன், சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்தவர். தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலஹாசனின் “இந்தியன் 2 “ படத்திலும் பணியாற்றி வருகிறார்.

மிகப் பெரும் படங்களில் பணியாற்றும் அதே நேரம் கலைக்கு மதிப்பளித்து, தரமான சிறு படங்களிலும் பணியாற்றத் தவறுவதில்லை அவர். வெகு சிறு பட்ஜெட் படமான குமாரி 21F தெலுங்கு படத்தில் பணியாற்றினார் அவர். ரஜினிகாந்த், மகேஷ்பாபு போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் இடைவெளியில் இம்மாதிரியான சிறு படங்கள் செய்து, இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் எங்கள் படத்தில் பணியாற்றுவது எங்களுக்குப் பெருமை. எடிட்டிங் ஆண்டனி. நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>