இராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதி !

September 30 is the last date to apply to join the Army College!

by Loganathan, Sep 28, 2020, 17:34 PM IST

ராணுவ கல்லூரியில் சேருவதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 2021 ஜூலை பருவத்தில் சேர்க்கைக்கான, தகுதித் தேர்வுக்கு 1.1.2010க்கு பின்னதாகவும் 2.7.2008 முன்னதாக பிறந்தவராகவும் 1.7.2021ல் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கான தகுதித் தேர்வு 2020 டிசம்பர் 1,2 ல் தேதிகளில் நடைபெறுகிறது.

விருப்புள்ளவர்கள் விண்ணப்பத்தினை The Commandant, RIMC, Garhi Cantt, Dehradun - 248003 Uttarakhand State என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டை பிரதிகளில்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு செப்.30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களுக்கு www.rimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்குத் தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை சந்தித்துப் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Special article News

அதிகம் படித்தவை