ஒருத்தர ஜனங்களுக்கு நல்லது செய்யவிடமாட்டாங்க போலிருக்கு.. உடனே அவங்கள வெச்சி ஃபிராடு நடக்க ஆரம்பிச்சிட்ராய்ங்க..கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தொடங்கியதும் லாக்டவுன் என்ற பெயரில் மக்களை வீட்டுச் சிறையில் அடைத்தது போலாகி விட்டது. வெளியூரிலிருந்து வேலைக்காக வந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் படிக்கச் சென்ற மாணவர்கள் எனப் பலரும் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். உங்களுக்கு விடிவுகாலம் உண்டு என்று சினிமா ஹீரோபோல் புறப்பட்டு வந்தார் சோனு சூட்.
சினிமாவில் வில்லனாக நடித்து வந்தவர் கொரோனா வில் மக்களுக்குச் செய்த உதவியால் நிஜத்தில் ஹீரோவாகி விட்டார். புலம் பெயர்ந்து தொழிலாளர்களை பல்லாயிரக்கணகானவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படிக்கச் சென்று திரும்பி வரமுடியாமல் தவித்தவர்களை விமானத்தில் மீட்டு இந்தியா அழைத்து வந்தார். தற்போது பள்ளிப் படிப்புக்காக எண்ணற்ற உதவிகள் செய்து வருகிறார். மக்களுக்கு தன்னால் இயன்றதை விடவும் அதிகமாக உதவி செய்த சோனு சூட் பெயரைக் கெடுக்க ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.
சோனு சூட் பெயரில் டிவிட்டர் கணக்கைத் தொடங்கிய நபர், தான் சோனூ சூட் மேனேஜர், சோனு சூட்டிடம் உதவி பெற வேண்டுமானால் 1700 ரூபாய் ஆய்வுக் கட்டணம் கட்ட வேண்டும் என்று மெஜேச் போட்டு வங்கிக் கணக்கு எண் ஒன்றையும் கொடுத்தார். இதுவரை இப்படிச் சொல்லி எத்தனை லட்சம் வசூல் செய்தார் என்பது தெரியவில்லை.
இந்த மோசடி விஷயம் சோனு சூட்டுக்கு தெரியவந்தது அதிர்ச்சி அடைந்தார். இதேபோன்றவர்களிடம் ஏமாற வேண்டாம். இப்படி ஏமாற்றுபவர்களுக்கு வேலை வேண்டுமென்றாலும் பெற்றுத் தருகிறேன் நியாயமாக உழைத்து வாழுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் சோனுவின் நண்பர்-நடிகர் விஷால் லம்பா மும்பை ஒஷிவாரா போலீஸில் சோனு சூட் பெயரில் மோசடி நடத்திய ஆசாமி மீது புகார் அளித்திருக்கிறார். அதை ஏற்று மோசடி நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.