மத்திய மந்திரியை தவறாக டேக் செய்த இச்சாதாரி பாம்பு நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டீஸன்கள்..

Ichathari Sneake Actress Mouni rai Tag Central Minister Rajnath singh

by Chandru, Sep 30, 2020, 12:03 PM IST

இச்சாதாரி பாம்பு நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தை எடுக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என்று சினிமா, டிவி மற்றும் கதைகளில் சொல்லப்படுகிறது. தமிழில் வெளியான நீயா படத்தில் நடிகை ஸ்ரீபிரியா அந்த வேடம் ஏற்று நடித்தார். இப்படம் வெளியாகி நீண்ட வருடங்களுக்குப் பிறகு நீயா 2 படத்தில் இந்த வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார்.

தற்போது இச்சாதாரி பாம்பு கதையொன்று நாகினி என்ற பெயரில் டிவி சீரியலாக வெளியாகி வருகிறது. இச்சாதாரி பாம்பு வேடத்தில் நடிகை மவுனி ராய் நடிக்கிறார். சமீபத்தில் இவர் தனது பிறந்த நாளை மாலத் தீவில் கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், நண்பர்கள், டிவி நட்சத்திரங்கள் என ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து சொல்லியவர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு மவுனி ராய் சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து அவர்களது பெயரை டேக் செய்திருந்தார். அப்படி டேக் செய்ததில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெயரையும் டேக் செய்தார்.
ராஜ் நாயக் என்ற டிவி துறையை சேர்ந்தவர் மவுனி ராய்க்கு வாழ்த்து கூறியிருந்தார். அவரது பெயரைத் தவறாகப் புரிந்துக் கொண்டு மத்திய மந்திரி ராஜ் நாத் சிங்கிற்கு மவுனிராய் நன்றி தெரிவித்து டேக் செய்ததைக் கண்டுபிடித்த நெட்டிஸன்கள் நடிகையைப் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மத்திய மந்திரி வாழ்த்து சொல்லும் அளவுக்கு நீ வளரவில்லை என்றும், நேற்று போட்ட சரக்கு போதை இன்னமும் தெளிய வில்லையா என்று கலாய்த்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை