இளம் நடிகருடன் பிரபல பாடகி காதல் வசம்? கல்யாணம் எப்போது என்றதற்கு சூடான பதில்..

Is Singer Pragathi in love with Actor Ashok Selvan

by Chandru, Sep 30, 2020, 12:59 PM IST

திரைப்பட இளம் பின்னணி பாடகி பிரகதி. நடிகர் அசோக் செல்வனுடன் காதலில் இருப்பதாக அவ்வப்போது தகவல் வருகிறது. சமீபத்தில் ஒரு ரசிகர் பிரகதியிடம் அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். அந்த கேள்வியைப் பார்த்ததும் பிரகதிக்குக் கோபம் பொத்திக்கொண்டு வந்தது. ​​அவர் எப்படி இருக்கிறார் என்பதை நடிகரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று சூடாகப் பதில் அளித்தார்.

இன்னொருவர், நீங்கள் நடிகர் அசோக் செல்வன் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வதந்தி பரவுகிறதே.. என்றார். அதைக்கேட்டு கோபத்தின் உச்சத்துக்குச் சென்றார். நான் யாருடனும் உறவில் இல்லை அல்லது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திலும் இல்லை. இதை நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன். எனக்கு இருபது வயது தான் ஆகிறது. தொழிலில் தான் கவனம் செலுத்துகிறேன். கல்லூரியிலும் படித்து வருகிறேன். என் வாழ்க்கையை முடிவு செய்யும் இடத்தில் தற்போது நான் இல்லை. திருமணம் செய்யும் எண்ணத்திலும் இல்லை என் பட்டாசாக வெடித்துத் தள்ளினர்.
டிவி ரியாலிட்டி ஷோவில் பாடகி பிரகதி பங்கேற்று வெற்றி பெற்றுப் புகழ் பெற்றார். பிரகதி இப்போது மாடலிங் துறையிலும் ஈடுபட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை